அமெரிக்காவில் பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி வாஷிங்டன் நகரில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கும் சென்றார். அப்போது அங்கு மூவண்ண தேசியக்கொடியுடன் திரண்டிருந்த அமெரிக்க வாழ் இந்தியர்கள் மோடியை பார்த்ததும் "மோடி, மோடி, பாரத மாதா வாழ்க" என்று முழக்கமிட்டு உற்காசவரவேற்பு அளித்தனர்.

இதேபோல் மத்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ், இந்திய தூதரக அதிகாரிகளும் மகாத்மா காந்தி நினைவிடத்தில் மோடியை வரவேற்றனர். பின்னர், அங்கிருந்த காந்தி சிலைக்கு மோடியும், அவரைத் தொடர்ந்து சுஷ்மா சுவராஜூம் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து அங்கு தன்னை பார்ப்பதற்காக பல மணி நேரம் காத்திருந்த இந்தியர்களுடன் மோடி கைகுலுக்கினார். அவர்களுடன் சிறிதுநேரம் பேசி மகிழ்ந்த பிறகு அங்கிருந்து புறப்பட்டார். 

Tags:

Leave a Reply