தூய்மை இந்தியா திட்டத்தை இன்று (2ம் தேதி) பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைக்கிறார். சென்ற சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றுகையில், ''தூய்மை இந்தியா திட்டம், காந்திஜெயந்தி அன்று தொடங்கப்படும். இந்ததிட்டம் அடுத்த 4 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும் என்று கூறியிருந்தார்.

அதன்படி, 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோடி இன்று (2ஆம் தேதி) டெல்லியில் தொடங்கிவைக்கிறார்.

இதையடுத்து, இன்று (2ம் தேதி) மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தங்களின் அலுவலகங்களுக்கு தவறாமல் வர வேண்டும் எனவும், அலுவலகங்களில் உள்ள கழிவறைகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் தூய்மைப் படுத்தும் பணியில் ஈடுபடவேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.

மேலும், இன்று காலை மத்திய அரசு ஊழியர்கள் அனைவரும் தவறாமல் 9 மணிக்கு அலுவலகத்திற்கு வந்துவிடவேண்டும் எனவும், இதைத் தொடர்ந்து 9.45 மணியளவில் 'வாரந் தோறும் 2 மணி நேரம் அலுவலகத்தை தூய்மைப்படுத்தும் பணிக்கு செலவிடுவேன். நான்வசிக்கும் இடத்தையும், அலுவலகத்தையும் அசுத்தப்படுத்த விடமாட்டேன். தூய்மை இந்தியா திட்டம்குறித்து கிராம, நகர மக்களிடையே விழிப் புணர்வு பிரசாரம் செய்வேன்' என்ற உறுதி மொழியை எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Leave a Reply