பாரதத்தின் பிரதமராக நரேந்திர மோடி சிறப்பாக செயல் படுகிறார். இருப்பினும் இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போல சிறந்தபிரதமர் யாரும் இல்லை என்று பாஜக மூத்த தலைவர் அத்வானி பேசினார். குஜராத்தின் ஆமதாபாத்தில் பாஜக.,வின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நரேந்திரமோடி பிரதமராக சிறப்பாகச் செயல்படுகிறார். பிரதமருக்கான பொறுப்பை உணர்ந்து மோடி உழைக்கிறார். இதனால் உலகளவில் மக்களின் புகழைபெற்றுள்ளார். ஆனால், ஒருபிரதமர் நாட்டை திறம்பட ஆட்சிசெய்தால் மட்டும் போதாது; மற்ற நாடுகளுடன் உறவுகளை உருவாக்குவதும் முக்கியம்.

அவ்வாறு, உலகளவில் மக்களின் செல்வாக்கை மோடி பெற்றுள்ளார். மோடி பிரதமராக வெற்றிபெற்றதும் என்ன நடக்கப் போகிறதோ… மற்றவர்களுடன் எப்படி தொடர்பு வைத்துக் கொள்வாரோ என்றெல்லாம் எனக்கு யோசனை இருந்தது. ஆனால் இப்போது மகிழ்ச்சியாக உள்ளேன் . அவர் திறமையாக செயல்படுகிறார். மற்றவர்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து வேலைசெய்கிறார்கள். அதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனாலும், இந்திய வரலாற்றில் வாஜ்பாயை போன்று சிறந்த பிரதமர் யாரும் இல்லை. வாஜ்பாயைப் போல் வேறு ஒருவரை கற்பனைசெய்து பார்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார் எல்.கே.அத்வானி.

Leave a Reply