உ.பி., மாநிலம் வாரணாசியில் மகா கவி சுப்பிரமணிய பாரதியார் வாழ்ந்த வீட்டை அம்மாநில அரசின் சுற்றுலா வரை படத்தில் சேர்க்க வேண்டும் என மாநிலங்களவை உறுப்பினர் தருண்விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுதந்திரப் போராட்ட வீரர் மகா கவி பாரதியார் வாழ்ந்த வாரணாசி வீட்டை மத்திய அரசின் பாரம்பரிய சின்னமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள தருண் விஜய் . இதற்காக, அவர் தனது மனைவி வந்தனாவுடன் நேற்று முன்தினம் வாரணாசியில் உள்ள பாரதியார்வாழ்ந்த வீட்டுக்கு சென்று பார்வையிட்டார்.

இதுகுறித்து, தருண்விஜய் கூறும்போது, "பாரதியார் வாழ்ந்த வீடு இருக்கும் ஹனுமன் காட் வாரணாசியிலேயே மிகவும் அசுத்தமான பகுதியாக காட்சி தருகிறது . அங்கு செல்வதற்கான சாலைகள் மிக மோசமாக உள்ளன. இதை சுத்தம்செய்து, சாலைகள் அமைக்க மாநில அரசால் மட்டுமே முடியும். எனவே, இந்த விஷயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன், பாரதியார் வாழ்ந்த இல்லத்தை மாநில அரசின் சுற்றுலா வரை படத்தில் சேர்க்க உபி முதல்வர் அகிலேஷ்யாதவ் உத்தரவிட வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பாக, அகிலேஷ் யாதவை நேரில் சந்தித்து வலியுறுத்த இருப்பதாகவும், இதை உ.பி. அரசே அதிகாரப்பூர்வாமக வரைபடத்தில் சேர்ப்பதால் வாரணாசிக்கு வரும் லட்சக்கணக்கான யாத்ரீகர்களும் பாரதியாரின் புகழை தெரிந்து கொள்ள முடியும் எனவும் தருண் நம்பிக்கை தெரிவித்தார்.

Leave a Reply