சோனியா தனது கண்களை திரைபோட்டு மறைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என பாஜ தலைவர் அமித்ஷா பிரசாரத்தின் போது தெரிவித்துள்ளார் .

பாஜ தலைவர் அமித்ஷா அரியானாவில் சோனாபட் மாவட்டத்தில் நடைபெற்ற பிரசாரத்தின் போது பேசுகையில், அரியானாவில் காங்கிரஸ் ஆட்சி தான் நடக்கிறது. ஆனால் அவருக்கு ஏழைகளின் அழு குரல் கேட்கவில்லை. வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களின் அழுகை கேட்கவில்லை. வன் முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களின் ஓலம் கேட்க வில்லை. இதெல்லாம் உண்மையில்லையா? உங்களால் உண்மையை பார்க்க முடியாதபடிக்கு கண்களை திரைபோட்டு மறைத்திருக்கிறீர்கள் என்று எனக்கு நன்றாகதெரியும். உங்களால் ஏழைகளின் துயரங்களை புரிந்துகொள்ள முடியாது. நீங்கள் ஏழையாக பிறந்தவர் கிடையாது. பிரதமர் மோடி ஏழையாக பிறந்து டீ விற்றவர். அதனால் அவரால் ஏழைகளின் பிரச்னைகளை புரிந்துகொள்ள முடியும். இந்த தவறுகள் அனைத்தையும் நீங்கள் கண்டு கொள்ளாவிட்டால் உங்களையும், காங்கிரசையும் கடவுள் தான் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். –

Leave a Reply