அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணுவதில் பிரதமர் நரேந்திரமோடி உறுதியுடன் இருப்பதாக வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்துள்ளார்.

அண்மையில், அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாகாணத்தில் "வெளிநாடு வாழ் பாஜக நண்பர்கள்' அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் மேலும் பேசியதாவது:

அண்டை நாடுகளுடன் நல்லுறவை பேணவேண்டும் என்பதில் பிரதமராக பதவியேற்பதற்கு முன்னதாகவே பிரதமர் உறுதியாக இருந்தார்.

அதனால் தான் அவரது பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க, தெற்காசிய நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

நல்லுறவை மேம்படுத்துவதற்காக பூடான், நேபாளம், ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு அவர் மேற்கொண்ட பயணங்கள் வெற்றி கரமாக அமைந்திருந்தன என்றார் சுஷ்மா ஸ்வராஜ்.

Tags:

Leave a Reply