நான் டெல்லியில் இருக்கும்வரை மராட்டிய மாநிலத்தை யாராலும் பிரிக்கமுடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மராட்டிய மாநில சட்ட சபைக்கு வருகிற 15ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது . மாநிலத்தில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி தீவிரபிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று துலேபகுதியில் பிரதமர் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியினர் பருத்தி மற்றும் வெங்காயம் தொடர்பாக கடந்த பத்து ஆண்டுகளாக பொய்பிரசாரம் செய்து வருகின்றனர்.

தற்போது அவர்கள் புதியதாக ஒருபொய்யை பரப்ப தொடங்கியுள்ளனர். மராட்டியம் பிரிக்கப்படும் என்று அவர்கள் கூறி வருகிறார்கள். சிவாஜியின் மண்ணை பிரிக்க இந்தநாட்டில் யாராவது பிறந்து இருக்கிறாரா?. நான் டெல்லியில் ஆட்சியிலிருக்கும் வரையில், உலகின் எந்த சக்தியாலும் மராட்டியத்தை பிரிக்கமுடியாது, மராட்டியத்தில் இருந்து மும்பையை பிரிக்கமுடியாது என்று உறுதி தருகிறேன் என்றார்.

Leave a Reply