82வது இந்திய விமானப் படை தினம் இன்று கொண்டாடப் படுகிறது. டிவிட்டரில் இது தொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது;

இன்று 82வது விமானப்படை தினம் . இந்திய விமானப் படை 1932 அக்டோபர் 82தேதி அதிகாரபூர்வமாக உருவாக்கபட்டது. இந்திய விமானப் படை தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திரமோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

அதில் இந்திய விமானப்படை நாளில் விமானப் படையினருக்கு நான் வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன். அவர்கள் நமக்கு பெருமைசேர்ப்பவர்கள். வீரர்களை வாழ்த்துகிறேன். வீரர்கள் நமது நாட்டின் பெருமைக் குரியவர்கள். அவர்களது வீரம், கடமை மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தொடர்ந்து நாட்டிற்கு ஊக்கமளிப்பதாக இருக்கும். அவர்கள துணிச்சல் மிக்கவர்கள்.அவர்கள் உறுதிப் பாடும் அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஊக்குவிப்பும் தொடர எனது வாழ்த்துக்கள். என பிரதமர் நரேந்திரமோடி கூறியுள்ளார்.

Leave a Reply