புது தில்லியில் நேற்று கனடா நாட்டு வெளியுறவு துறை அமைச்சர் ஜான்பெய்ர்ட் மற்றும் சர்வதேச வர்த்தக துறை கனடா அமைச்சர் ஆகியோரை பிரதமர் நரேந்திரமோடி வரவேற்றார்.

இந்த சந்திப்பின்போது இந்தியா மற்றும் கனடா இடையே நிலவும் இருதரப்பு உறவு திருப்த்தி கரமானதாக உள்ளது என்றும் அதை மேலும் விரிவு படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மேலும் பொருளாதார ஒத்துழைப்பு, விவசாயம், பாதுகாப்பு, அணு சக்தி ஆற்றல், கல்வி, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பகுதிகள் உட்பட வர்த்கம் மற்றும் முதலீடு உள்கட்டமைப்பு வளர்ச்சி உள்ளிட்டவற்றுக்கு அதிக முக்கியத்துவம் செலுத்துமாறு பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்தார்.

Leave a Reply