தேசமே முதலில் என்று கூறுபவர்கள் தீண்டத் தகாதவர்களா?, காணக் கூடாதவர்களா?, தேசத்துக்கு சேவை செய்வதையே தங்கள் இலக்காக கொண்டு பாரத் மாதாகீ ஜெ என்று அனுதினமும் முழங்கும் அவர்களது உரைகள் கேட்க கூடாதவைகளா?. ஆனால் அப்படித்தான் கூறுகின்றன இங்கே உள்ள பல அரசியல் கட்சிகளும் , ஊடகங்களும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு 1925-ம் ஆண்டு விஜயதசமி அன்று தொடங்கப்பட்டது. எனவே அந்நாளை ஒவ்வொரு வருடமும் மார்கதர்ஷன் விழாவாக கொண்டாடுவதும், அதன் தலைவர் பலாயிரம் தொண்டர்களின் மத்தியில் பேருரை ஆற்றுவதும் வழக்கம். அதேபோன்று இந்த வருடமும் அதன் 89வது ஆண்டு தொடக்க தினத்தை முன்னிட்டு அதன் தலைவர் மோகன் பகவத் நாக்பூரில் சிறப்புறையாற்றினார் ஆர்.எஸ்.எஸ்.,ஸிடம் பயின்று , பாஜக.,வில் தனது அரசியல் பணியை தொடங்கிய நரேந்திர மோடி பிரதமர் என்பதால் இந்த வருட நிகழ்ச்சி கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றது என்பதில் எந்த ஆச்சரியமும் இல்லை.
எனவே இந்த வருட நிகழ்ச்சியை பல்வேறு முன்னணி செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களும் போட்டிப் போட்டுக்கொண்டு நேரடி ஒலிபரப்பு செய்ததில் வியப்பேதும் இல்லை என்றாலும். இதில் சுயசார்பு பெற்ற அரசு செய்தி நிறுவனமான தூர்தர்சன் நேரடி ஒலிபரப்பு செய்ததற்காக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகளின் விமர்சனத்துக்கு உள்ளாகி இருப்பதுதான் வியப்பை தருகிறது.

ஆர்.எஸ்.எஸ்., ஒரு மதவாத இயக்கம், சர்ச்சைக்குரிய இயக்கம் அதன் நிகழ்சிகளை எப்படி அரசு சார்பு நடுநிலை செய்தி நிறுவனம் ஒளிபரப்பலாம் என்று கேள்வி எழுப்பும் இவர்கள், 2013 ம் ஆண்டு கிருஸ்துமஸ் நிகழ்ச்சியில் போப் ஆண்டவர் ஆற்றிய உரையை நேரடி ஒலிபரப்பு செய்தபோது, டி.டி புவனேஸ்வர், ஜலந்தர் என்று பல மொழி சேனல்களில் கிறிஸ்துவ மத போதனைகளை ஒலிபரப்பு செய்தபோது மதவாதம் பற்றிய கேள்விகளை எழுப்பாதது ஏன்?.

காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சோனியா காந்தி, ராகுல் காந்தி நிகழ்சிகளை வளைத்து வளைத்து நேரடி ஒலிபரப்பு செய்தபோது, 2007 ம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்களை ஒலிபரப்பு செய்த போது, ஊணமுடையவர்களுக்கு சேவை செய்கிறேன் என்று சொல்லி அதில் ஊழல் செய்த சல்மான் குர்ஷித்தின் ட்ரஸ்ட் நிகழ்சிகளை நேரடி ஒலிபரப்பு செய்தபோது, பாராளுமன்ற தேர்தலில் மக்களின் அதிக ஆதரவை பெற்ற நரேந்திர மோடியின் பிரச்சாரத்துக்கு முக்கியத்துவம் தராமல் , மக்கள் காண விரும்பாத காங்கிரசின் கூட்டங்களுக்கு முக்கியத்துவம் தந்த போது டி.டி.,யின் நடுநிலைமை குறித்து யாரும் கேள்விகளை எழுப்பாதது ஏன்?

ஆர்.எஸ்.எஸ்., ஒரு கலாச்சார இயக்கம், ஐரோப்பியர்கள், எல்லாம் கோமணம் கட்டிக்கொண்டு சிறு வாழ்வு வாழ்ந்தபொழுது, ஆடை அணிகலன் அணிந்து பெருவாழ்வு வாழ்ந்த நமது மதிப்பு மிக்க கலாச்சாரத்தில் இருந்து நாம் வழிதவறி போய்விடக்கூடாது, நமது நாளைய தலைமுறையினருக்கும் தெரியாமலேயே போய்விடக்கூடாது என்ற நோக்கம் கொண்ட இயக்கம்.

தீண்டாமை இல்லை ஜாதி ஏற்றத் தாழ்வுகள் இல்லை, நீ எந்த மதத்தை வேண்டுமானாலும் பின்பற்று ஆனால் நம் கலாச்சாரத்திலிருந்து விடுபட்டு விடாதே!, இங்கே நாத்திகனுக்கு கூட இடம் உண்டு ஆனால் நாட்டு பற்றற்றவனுக்கு இடம் இல்லை என்று கூறும் இயக்கம் எப்படி மதவாத இயக்கமாக முடியும்?.

நம்வீட்டுக்கு, நம்குடும்பத்துக்கு என்று ஊருக்குள் நல்ல பேரு உண்டு, இப்படி இப்படி நடந்து கொள்ளுங்கள் என்று பொதுவாக மூத்தோர்கள் தங்கள் வீட்டு பேரக்குழந்தைகளிடம் கூறுவது உண்டு. அவர்களை வழிநடத்துவதும் உண்டு. அதே போன்றுதான் 89 வயது நிரம்பிய உலகிலேயே மிக மூத்த சமுதாய இயக்கங்களில் ஒன்றான ஆர்.எஸ்.எஸ். நாட்டைப் பற்றி கவலைப்படுவதில் எண்ண தவறு இருக்க முடியும்?.

மோகன் பகவத் இந்த வருட தனது பேச்சில் கூட எந்த மதத்தையோ, மனிதர்களையோ பலிக்கும் விதமாகவோ, மதக்கலவரத்தை தூண்டும் விதமாகவோ பேசவில்லையே. ஜாதி , மதங்களை கடந்து இந்தியர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் வளர்ச்சியை நோக்கி பயணிக்க வேண்டும் என்றுதானே பேசியுள்ளார்.

சிலர் கூறலாம் ஜிகாதி நடவடிக்கைகள் கேரளா- தமிழ்நாட்டில் அதிகரித்து விட்டது என்று  கூறினாரே இது மதவாதம் இல்லையா என்று கேள்வி எழுப்பலாம். அவர் இல்லாததை கூறவில்லையே, ஜிகாதிகள் நடவடிக்கை அதிகரித்ததன் அடையாளமாக இலங்கையில் இருந்து ஐ.எஸ்.ஐ பயிற்சி பெற்ற சில தீவிரவாதிகள் பிடி பட்டுள்ளனர். அவர்களுடன் தொடர்புடைய பல தீவிரவாதிகள் தமிழகம், கேரளாவில் பதுங்கி இருப்பதாக பல பத்திரிக்கையிலேயே செய்திகளாக நாம் பார்க்கிறோம்.

அவர் பங்களாதேஸில் இருந்து இஸ்லாமியர்கள் ஊடுருவல்களை எதிர்க்கிறார், இங்கே ஊடுருவி உள்ளவர்களை விரட்டுவோம் என்கிறார். அதே நேரத்தில் பங்களாதேஸ், பாகிஸ்தானில் இருந்து வரும் இந்துக்களை வரவேற்ப்போம் என்கிறார், அடைக்கலம் தருவோம் என்கிறார் இது மதவாதம் அல்லவா? என்று சிலர் கேட்கலாம். இந்துவும் , முஸ்லிமும் இணைந்தே வாழ முடியாது, கண்ணாடி உடைந்துவிட்டது இனி ஒட்டவே ஒட்டாது என்று தனி நாடு கண்டவர்கள் அவர்கள். காந்தி தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடத்தினார், உண்ணா விரதம் கூட தொடர்ந்து இருந்து பார்த்தார் . ஆனால் ஒன்றாக வாழமுடியாது பிரிந்தே செல்வோம் என்று தனிக் குடித்தனம் கண்டவர்கள் அவர்கள்.

இந்துவும், இஸ்லாமியரும் ஒன்றாக வாழ முடியாது என தனிக்குடுத்தனம் கண்டவர்கள் இன்று சீரழிந்து வாழ வழியில்லாமல் இங்கே மீண்டும் ஒண்ட வருவதை எப்படி ஏற்றுக்கொள்ள இயலும்?, அஸ்ஸாம் , மேற்கு வாங்கலாம் எல்லை பகுதிகளில் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக ஊடுருவி ஏற்கனவே எண்ணிக்கையில் அதிகரித்து விட்டவர்கள், கண்ணாடி உடைந்து விட்டது இனி ஒட்டவே ஒட்டாது என்று வசனம் பேசி நம் மண்ணை மீண்டும் ஒருமுறை துண்டாட மாட்டார்கள் என்பதில் என்ன நிச்சயம்?.

இந்துவும், இஸ்லாமியரும் ஒன்றாக வாழ முடியும் என்று அன்று முழங்கிய பாரதம். பாகிஸ்தான் பங்களாதேசை விட அதிகமான இஸ்லாமியர்களை கொண்ட பாரதம், வளர்ச்சி பாதையை நோக்கி இன்று வீறு நடை போடுகிறதே?. இங்கிருந்து எந்த இஸ்லாமியரும் பாகிஸ்தான், பங்களதேஸ்க்குள் ஊடுருவவில்லையே?. இதுதான் நம் தேசத்தின் மதச்சார்பின்மை, இந்து இயக்கங்களின் மதச்சார்பின்மை.

தமிழ் தாமரை VM வெங்கடேஸ்

Tags:

, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ,

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.