ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் பா.ஜ.க.,வுக்கு கிடைத்துள்ளது வரலாற்று சிறப்புமிக்க வெற்றி என பிரதமர் நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டர் இணையதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இது வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முடிவாகும். பாஜகவுக்கு இது தீவிர மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கும் விஷயமாகும். வெற்றிக்காக களைப்பின்றி உழைத்ததொண்டர்களை வணங்குகிறேன்.

தங்களின் கனவுகளை நிறைவேற்றும் வாய்ப்பை பாஜக.,வுக்கு அளித்த ஹரியாணா மக்களுக்கு நன்றி. மகாராஷ்டிர மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த மாநிலத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் என்று மோடி தெரிவித்துள்ளார்.

Leave a Reply