பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான ஆட்சியின்மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே, இருமாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் பாஜகவை மக்கள் வெற்றியடைய செய்திருப்பதாக மாநிலத் தலைவர் தமிழிசை செüந்தர ராஜன் கூறினார்.

மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய இருமாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. இந்தவெற்றியை தமிழக பாஜகவினர் பட்டாசுவெடித்து, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடினர். தியாராய நகரில் உள்ள கட்சி அலுவலகமான கமலாலயத்தில் தொண்டர்களுக்கு பாஜக தலைவர் தமிழிசை இனிப்புகள்வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

இருமாநிலங்களிலும் பாஜக.,வைத் தனிப்பெரும் கட்சியாக மக்கள் அங்கீகரித்துள்ளனர். மகாராஷ்டிரத்தில் ஆட்சியமைக்கும் அளவுக்கு பெரும்பான்மை கிடைக்காமல் இருந்தாலும், பாஜக.,தான் அதிக இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.

சயான் கோலிவாடா தொகுதியில் தமிழரான தமிழ்ச் செல்வனை ஆதரித்துப் பிரசாரம் செய்தோம். அவர் வெற்றிபெற்றுள்ளார். இதுமிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இரு மாநிலங்களிலும் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டுள்ளது. நரேந்திர மோடி ஆட்சியின் மீது ஏற்பட்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே பாஜக.,வுக்கு இந்தவெற்றியை மக்கள் தந்துள்ளனர். இந்தவெற்றி தமிழகத்திலும் எதிரொலிக்கும்.

5 ஆண்டுகளில் இல்லாத வகையில் டீசல்விலை லிட்டருக்கு 3.37 காசுகள் குறைத்து, பொருளாதார சீர்திருத்தத்தை பாஜக அரசு தொடங்கியுள்ளது. இது மோடி அரசால் மக்களுக்கு கொடுக்கப்பட்ட தீபாவளி பரிசாகும் என்றார் அவர்.

Tags:

Leave a Reply