அரியானா முதல்வராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள கட்டார், 14 ஆண்டுகள் ஆர்எஸ்எஸ். அமைப்பில் பணியாற்றியவர். 20 ஆண்டுகளுக்கு முன்பு பாஜவுக்கு அனுப்பப் பட்டார். பிரதமர் நரேந்திரமோடி மற்றும் கட்சியின் தேசியத்தலைவர் அமீத் ஷாவுக்கு மிகவும் நெருக்கமானவர். திருமணமாகாதவர்.

அரியானாவில் பாஜவின் அமைப்பு செயலாளராக பணியாற்றினார். மாநிலத்தில் கட்சியின்வளர்ச்சிக்கு வழிமுறைகளை வகுத்து கொடுத்துBG7Y98NUBG7pbg7yyujybefdrefr7yujikrfr7by7byybg7;க எ௪௩௫த௬ப்க௭௧௨௩௪௫ப்*/ .369ள்ளார். மிகச்சிறந்த செயல் வீரராகக் கருதப்படுகிறார்.கடந்த 1990களில் அரியானா மாநில பொறுப்பாளராக மோடி இருந்த போது, அவருடன் நெருங்கி பணியாற்றியவர். அரியானாவில் தனது தேர்தல்பிரசாரத்தை கட்டாரின் தொகுதியான கர்னாலில் இருந்து மோடி தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

குஜராத்தின் கட்ச் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டப்பிறகு நடந்த தேர்தலின்போது கட்ச்பகுதியில் தேர்தல் பணிகளை கட்டார் கவனித்துள்ளார். மக்களவை தேர்தலின் போது தனது தொகுதியான வாரணாசியில் உள்ள 50 வார்டுகளில் தேர்தல் பணிகளை கவனித்து கொள்ளும்படி கட்டாரை கேட்டுக்கொண்டார் மோடி.

எவ்வித சர்ச்சையிலும் சிக்காதவர். மக்களவை தேர்தலின் போது கட்சியின் அரியானா மாநில தேர்தல் பிரசாரக்குழுவின் தலைவராக சிறப்பாக செயல்பட்டார். மாநிலத்தில் உள்ள 10 தொகுதிகளில் 7 தொகுதிகளில் பாஜக வென்றது. தனிமாநிலமாக சட்டீஸ்கர் அமைந்தபிறகு நடைபெற்ற தேர்தலின் போது காங்கிரஸ் மிகவும் வலுவாக இருந்த பஸ்தார் பகுதியில் தேர்தல் உத்திகளை வகுத்துகொடுத்தார்.

அதன்படி 12ல் 10 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது. மாநிலத்திலும் ஆட்சியை பிடித்தது.கடந்த 2002ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் தேர்தலின் போது தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். 2004ல் டெல்லி, ராஜஸ்தான் உள்பட 12 மாநிலங்களின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். தேர்தல் உத்திகளை சிறப்பாக வடிவமைப்பதுடன், அதை செயல் படுத்தி வெற்றியை உறுதிசெய்வதில் நிபுணராகக் கருதப்படுகிறார்.

சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் . பாகிஸ்தானில் இருந்த இவருடைய குடும்பம், சுதந்திரத்துக்கு பிறகு ஏற்பட்ட பிரிவினையை தொடர்ந்து அரியானாவின் ரோடக்மாவட்டம் நின்தானா கிராமத்துக்கு வந்தனர். 1977ம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்தார்.

Tags:

Leave a Reply