தமிழக பாஜக பொதுக் குழுக் கூட்டம், நவம்பர் முதல்வாரத்தில் நடக்கும் என்று கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் தமிழக பாஜக பொதுக் குழுக் கூட்டம் நேற்று நடப்பதாக அறிவிக்கப் பட்டிருந்தது. இதில் தமிழக பாஜக.,வின் புதிய பொறுப்பாளர் ராஜீவ் பிரதாப் ரூடி பங்கேற்பார் என்றும் கூறப்பட்டது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கூறியதாவது:

தமிழக பாஜக பொதுக் குழுக் கூட்டம் பூந்த மல்லியில் 26-ம் தேதி நடக்கவிருந்தது. இதில் கட்சியின் தேசிய நிர்வாகிகளும் புதியபொறுப்பாளராக நியமிக்கப் பட்டுள்ள ராஜீவ்பிரதாப் ரூடியும் பங்கேற்க இருந்தனர். இந்நிலையில், டெல்லியில் தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களுக்கு பிரதமர்மோடி நேற்று, தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இதில், பாஜகவின் மூத்த தலைவர்கள், தேசிய நிர்வாகிகள், மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலந்து கொள்கின்றனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழக பாஜக பொதுக் குழு கூட்டத்தை தள்ளி வைத்துள்ளோம்.

இந்த கூட்டத்தை நவம்பர் முதல்வாரத்தில் நடத்த திட்டமிட் டுள்ளோம். இது தொடர்பாக பாஜக தலைமையிடமும் தெரிவித்துள் ளோம். இவ்வாறு தமிழிசை கூறினார்.

Leave a Reply