உலகபெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்ற சானியா மிர்சாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெற்ற உலகபெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியாமிர்சா–ஜிம்பாப்வேயின் காராபிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இதைத்தொடர்ந்து, சானியா மிர்சாவைப் பிரதமர் வாழ்த்தியுள்ளார்.

"பெண்கள் டென்னிஸ் அமைப்பின் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற சானியா மிர்சாவுக்கு எனது வாழ்த்துகள். இது இன்னொரு பெருமைக் குரிய தருணமாகும்" என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply