சபரிமலைக்கு தரிசனம் செய்யவரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலைமிரட்டல் விடுத்து பா.ஜ.க அலுவலகத்திற்கு மிரட்டல்கடிதம் வந்துள்ளது.

கேரள மாநில பா.ஜனதா கட்சி தலைமை அலுவலகத்துக்கு ஒருகடிதம் வந்தது. அதில் இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் ஹெயன்சை ஐ.எஸ். தீவிரவாதிகள் கொல்லும்காட்சி போன்ற புகைப்படத்தையும், அதில் டேவிட் இருக்கும் இடத்தில் பிரதமர் நரேந்திரமோடியின் புகைப் படத்தையும் ஒட்டி அனுப்பப்பட்டு இருந்தது.

அத்துடன் ''சபரி மலை தரிசனத்திற்காக கேரளாவரும் நரேந்திர மோடியின் தலையை வெட்டுவோம்'' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இது குறித்து சைபர்கிரைம் போலீசின் உதவியுடன் கடிதம் அனுப்பியவரை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் கேரள போலீசார் மும்முரமாக ஈடுபட்டுவருகிறார்கள்.

Leave a Reply