டெல்லி ஜமா மசூதியின் இமாம், சையத் அகமதுபுகாரி, அவரது 19வயது மகனான ஷபானை துணைஇமாமாக நியமித்துள்ளார். இதற்கான விழா வருகிற நவம்பர் 22ம் தேதி மசூதியில் நடைபெறுகிறது. இதில் கலந்துகொள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புக்கு புகாரி அழைப்பு விடுத்துள்ளார். ஆனால் பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப் படவில்லை.

இதற்கிடையே மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், ஹர்ஷ்வர்தன், சையத் ஷா நவாஸ் ஹூசைன் மற்றும் விஜய்கோயல், மேற்கு வங்காளம் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உ.பி. முதல்-மந்திரி அகிலேஷ் யாதவ், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல்காந்திக்கு புகாரி அழைப்பு விடுத்துள்ளார். பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்காததை நியாயப்படுத்திய இமாம் புகாரி, இது ஒருதனிப்பட்ட போராட்டம் அல்ல. அவருக்கு எங்களை பிடிக்காது மற்றும் எங்களுக்கு அவரைபிடிக்காது. அவர் இஸ்லாமியர்களுடன் இணக்கமாக இருக்க முயற்சி செய்ய வில்லை. இஸ்லாமியர்களை விட்டு விலகியே உள்ளார்." என்றார்.

இமாமின் அறிக்கைக்கு பதில் அளித்துள்ள பாஜக, இது மிகவும் துரதிஷ்டவசமானது. அவருடைய நடவடிக்கை யினால் என்ன தகவலை வெளிக் கொண்டுவர அவர் விரும்புகிறார் என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. "அவராகவே கேள்வி எழுப்பியுள்ளார். இந்திய இஸ்லாமியர்கள் இந்தியாவில் பிறந்தவர்கள். அவர்கள் இந்தியாவை விரும்பு கின்றனர். பாகிஸ்தானை பற்றி ஒரு போதும் நினைக்க மாட்டார்கள். இதன்மூலம் அவர் என்னசொல்ல விரும்புகிறார்." என்று பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நளின் கோக்லி கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave a Reply