பசும் பொன் முத்து ராமலிங்கத் தேவர் குருபூஜை விழாவில் கலந்துகொள்ள வந்திருந்த மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் பேசியதாவது , இலங்கையில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்கள் விவகாரத்தில் கொடுத்தவாக்கை மீறிவிட்டார் ராஜபட்ச; இது விஷயத்தில் இந்திய அரசு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு, மீனவர்களை விடுவிக்க ஏற்பாடுசெய்யும் என்றார்.

மேலும் அவர் பேசியபோது…

கடந்த ஆண்டு தேவர் குரு பூஜை விழாவுக்கு நான் வந்திருந்தேன். அப்போது, இங்கே இந்தியப் பிரதமராக மோடி வரவேண்டும் என மனதார பிரார்த்தனை செய்து கொண்டேன். அது இப்போது பலித்திருக்கிறது. அதற்காக இந்தமுறை நன்றி செலுத்தினேன்.

வரக்கூடிய காலங்களில் பிரதமரையும் இங்கே அஞ்சலிசெலுத்த அழைத்து வர ஏற்பாடுசெய்வேன். தேவர் பற்றிய விவரங்கள், வரலாறு ஆகியவற்றை கடிதம்மூலம் அவருக்குத் தெரிவித்துள்ளேன்.

இலங்கையில், ராமேஸ்வரம் மீனவர்கள் ஐவருக்குத் தூக்குத்தண்டனை அளிக்கப் பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. அவர்களை விடுதலைசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதுவரை தமிழக மீனவர்கள் 500க்கும் மேற்பட்டோர், இந்தவருடம் விடுதலை செய்யப் பட்டுள்ளனர். இதற்கு பிரதமர் மோடியும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜும் தான் காரணம்.

இங்குவந்திருந்த இலங்கை அதிபர் ராஜபட்சவிடம், தமிழக மீனவர்கள் அனைவரையும் விடுதலைசெய்ய வேண்டும் என்று கேட்டபோது, தற்போது தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அந்த ஐவரையும் சேர்த்துதான் கேட்டிருந்தோம். அப்போது ராஜபட்சவும் இது குறித்து உடனடி நடவடிக்கை எடுப்பதாக அறிவித்திருந்தார்.

இப்படிப்பட்ட சூழலில் மரண தண்டனை என்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இதன்மீது, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும்.

நான் நாளை உடனே சென்னையில் இருக்கவேண்டிய நிர்பந்தத்தில் இருப்பதால் தங்கச்சி மடத்தில் வருத்தத்தில் உள்ள மீனவர்களை நேரில்சென்று சந்தித்து, ஆறுதல் சொல்ல முடியவில்லை. அவர்களின் உணர்வுக்கு மதிப்பளிக்கிறேன். அவர்கள் வலி புரிகிறது. வேதனையாக இருக்கிறது. நிச்சயம் நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடுசெய்வோம்.

மீனவர் நலவாரியம் அமைப்பதாக வாக்குறுதி முன்னர் எதுவும் கொடுக்கவில்லை. ஆனால், அனைத்து நல வாரியங்களும் அமைக்கும் போது மீனவர் நலவாரியமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது பரிசீலனையில் உள்ளது.

மீனவர்களின் படகுகள் மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வுகாண நிச்சயம் நல்லவழி பிறக்கும் என்று மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளரிடம் பேட்டி அளித்தார்.

Leave a Reply