சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதாலும், மோடி தலைமையிலான மத்திய அரசின் சிறந்த நிர்வகத்தினாலும் பெட்ரோல், டீசல் விலை மீண்டும் குறைந்தது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41 குறைக்கப்பட்டுள்ளது; டீசல் விலை லிட்டருக்கு ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது.

டீசல் விலை ரூ.2.25 குறைக்கப் பட்டதை தொடர்ந்து, டில்லியில் லிட்டருக்கு ரூ.55.60 ஆக விற்பனை செய்யப்பட்டுவந்த டீசல், ரூ.2.25 குறைந்து 53.35க்கு விற்கப்படும். கோல்கட்டாவில் லிட்டருக்கு ரூ.60.30 ஆக விற்பனை செய்யப்பட்டுவந்த டீசல், ரூ.2.35 குறைந்து 57.95க்கு விற்கப்படும். மும்பையில் லிட்டருக்கு ரூ.63.54 ஆக விற்பனை செய்யப் பட்டு வந்த டீசல், ரூ.2.50 குறைந்து 60.04க்கு விற்கப்படும். சென்னையில் லிட்டருக்கு ரூ.59.27 ஆக விற்பனை செய்யப் பட்டு வந்த டீசல், ரூ.2.58 குறைந்து 56.84க்கு விற்கப்படும்.

சென்னையில் ரூ.69.59-க்கு விற்கப்பட்டு வந்த ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.67 ஆகவும், ரூ.59.27-க்கு விற்பனையான ஒருலிட்டர் டீசல் ரூ.56.84 ஆகவும் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மானியம் இல்லா சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.18.50 குறைக்கப் பட்டுள்ளது. அதன்படி, 14.2 கிலோ எடையுள்ள ஒருசிலிண்டரின் விலை ரூ.865ஆக குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து நான்காவது முறையாக விலை குறைக்கப்பட்டுள்ளது, மேலும் ஓராண்டிற்கு முன் டீசல் என்ன விலைக்கு விற்கப் பட்டதோ அந்த நிலையை மீண்டும் இப்போது அடைந்துள்ளது.என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply