பிரதமர் நரேந்திர மோடி என்னுடைய மூத்தசகோதரர் போன்று பேசுகிறார் என முன்னாள் காஷ்மீர் பிரிவினைவாதி சஜ்ஜத் லோன் தெரிவித்துள்ளார்.

காஷ்மீர் மாநிலத்தில் சட்ட மன்றத் தேர்தல் நடைபெற உள்ளநிலையில், முன்னாள் காஷ்மீர் பிரிவினைவாதி சஜ்ஜத் லோன், நேற்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துபேசினார். பிரதமர் மோடியை சந்தித்துபேசிய பின்னர் செய்தியாளர்களிடம் சஜ்ஜத் லோன் பேசுகையில், அரசியல் தொடர்பாக எதுவும் ஆலோசிக்கப் படவில்லை. நான் ஒருகாஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவராக, காஷ்மீரில் வெள்ளத்திற்கு பிறகு மக்கள் எதிர் கொள்ளும் சிரமங்களை பிரதமர் மோடியிடம் தெரிவித்தேன்.

"பிரதமர் மோடி பெரியமனிதர், அவருடைய எளிமை, மாநிலத்திற்கு முதலீடுகளை கொண்டுவருவது தொடர்பான அவரது பார்வை எனக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது," "நான் பிரதமரிடம் பேசினேனா அல்லது என் மூத்த சகோதரரிடம் பேசினேனா என்பதை என்னால் வேறு படுத்த முடியவில்லை." என்று சஜ்ஜத் லோன் தெரிவித்தார். முன்னதாக சஜ்ஜத் லோன் ராம் மாதவை சந்தித்துபேசினார். சஜ்ஜத் லோன், தனது தந்தை அப்துல்கனி லோனால் நிறுவப்பட்ட மக்கள் மாநாட்டு கட்சியை புதுப்பிக்க முடிவுசெய்துள்ளார். இவரது கட்சி குபுவாரா மற்றும் ஹன்ட் வாராவில் 12 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மராட்டியம் மற்றும் அரியானாவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக பெரும் வெற்றி பெற்றது. 88 தொகுதிகளை கொண்ட காஷ்மீர் சட்ட சபையில் 44-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்று பாஜக முனைப்புடன் உள்ளது. கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்றத் தேர்தலில் பாரதீய ஜனதா 11 தொகுதிகளில் வெற்றிபெற்றது. கடந்த மே மாதம் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 6 பாராளுமன்ற தொகுதிகளை கொண்ட ஜம்மு காஷ்மீரில் பாஜக 3 தொகுதிகளில் வெற்றிப்பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Leave a Reply