ஜிகாத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் நடப்பதாக எழுந்துள்ள சந்தேகத்தை தொடர்ந்து மதரஸாக்கள் சிலவற்றை கண்காணிக்க நடவடிக்கை எடுத்து ள்ளதாக மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் பர்த்மானில் உள்ள மதரஸா ஒன்றில் வங்க தேசத்தவர்கள் சிலர் ஆசிரியர்களாக உள்ளனர். அவர்கள், ஜமாத்உல் முஜாகிதீன் பங்களாதேஷ் என்ற தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள். மதரஸாக்களில் கல்விகற்க வரும் மாணவர்களிடையே ஜிகாத்துக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்துவருகின்றனர் என்று தகவல் வெளியானது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்த உளவுத் துறையினர், இந்திய ஆசிரியர்கள் பணியாற்றும் மதரஸாக் களில் தீவிரவாதம் தொடர்பாகவோ, பிரிவினை வாதம் தொடர் பாகவோ எந்த விதமான பிரச்சாரமும் நடைபெறு வதில்லை. ஆனால், வங்கதேசம், பாகிஸ்தானைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றும் மதரஸாக்களில் தீவிர வாதத்துக்கு ஆதரவான பிரச்சாரம் நடைபெறுகிறது என்று எச்சரித்திருந்தனர்.

இதையடுத்து வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் ஆசிரியர்களாக உள்ள மதரஸாக்கள் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

குர்கானில் நடை பெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறும் போது, "வெளிநாடுகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் பணியாற்றும் மதரஸாக்களில் தீவிரவாதம் தொடர்பான பிரச்சாரம் மேற்கொள்ளப்படுவது குறித்து விசாரணை நடத்திவருகிறோம். சந்தேகத்துக்கிடமாக செயல்படும் மதரஸாக்கள் மீது கண்காணிப்பை அதிகரித்துள்ளோம்" என்றார்.

Leave a Reply