மக்கள் நலனை மையமாக கொண்டும், அதில் மக்கள் பங்குகொள்ளும் விதத்திலும் சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜி-20 மாநாட்டில் பங்கேற்க ஆஸ்தி ரேலியா வந்துள்ள உலகநாடுகளின் தலைவர்களுக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் சனிக் கிழமை விருந்தளித்தார். பிரதமர் மோடியிடம் டோனி அபாட் வெள்ளிக்கிழமை பேசும் போது, சீர்திருத்தம் தொடர்பான அவரது திட்டத்தை தெரிவிக்கும்படி கேட்டிருந்தார். அதன்படி, அபாட் அளித்த விருந்து நிகழ்ச்சியில் இதுகுறித்து அவர் பேசியதாவது:

சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, எதிர்ப்பு ஏற்படத் தான் செய்யும். எனினும், அரசியல் நிர்ப்பந்தங்களினால் சீர்திருத் தங்களால் பாதிக்கப்படாதவாறு, அவற்றை செயல்படுத்த வேண்டியது அவசியமாகும்.

மக்களை மையமாக கொண்டும், மக்கள்பங்கேற்கும் வகையிலும், சீர்திருத்தம் செய்யப்படவேண்டும். ரகசியமாக சீர்திருத்தம் செய்யப்படக்கூடாது. சீர்திருத்தங்கள் எளிமையாக்கப் பட வேண்டும். அதற்கு ஏற்றவகையில், நிர்வாக முறையிலும் சீர்திருத்தம் செய்யவேண்டியது அவசியம் என்றார் மோடி.

Leave a Reply