பா.ஜ.க தலைவர் அமித்ஷா அவுரங்காபாத், ஜல்னா மாவட்டங்களில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று அவர் அவுரங்கா பாத்தில் நிருபர்களிடம் தெரிவித்ததாவது.:–

மராட்டிய சட்ட சபை தேர்தலில் பா.ஜ.க மீது நம்பிக்கை வைத்து மாநில வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித் தனர். மக்களின் நம்பிக்கையை நிறைவேற்ற எங்கள் கட்சி தலைமையிலான அரசு மாநிலவளர்ச்சிக்காக பாடுபடும். மராட்டியம் இழந்த பெருமையை மீட்டெடுக்கும். மராட்டியத்தை மீண்டும் நம்பர் –1 மாநிலமாக மாற்றுவோம். இதற்காக தேவேந்திர பட்னாவிஸ் தலைமை யிலான அரசு இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் ஒவ்வொரு குடிமகனின் பிரச்சினை களுக்கும் தீர்வுகாணும். விவசாயம், நீர்ப்பாசனம், மின்சாரம், தொழில் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஒட்டுமொத்த வளர்ச்சி ஏற்படுத்தப்படும். என்று கூறனார்.

Leave a Reply