சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்துக்கு வந்த வெடி குண்டு மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு உருவாகியுள்ளது.

சென்னை தி.நகர் வைத்திய ராமன் தெருவில் பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயம் உள்ளது. இங்கு நேற்று மதியம் ஒருகடிதம் வந்தது. அதில், "பாஜக அலுவலகம், சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம், கல்பாக்கம் அணுமின் நிலையம் ஆகிய இடங்களில் வெடி குண்டுகள் வெடிக்கும்'' என்று கூறப்பட்டிருந்தது. அல்கொய்தா என்ற தீவிரவாத அமைப்பின் பெயரில் கடிதம் அனுப்பப் பட்டிருந்தது.

இதுகுறித்து பாஜக அலுவலக பொறுப்பாளர் சர்வோத்தமன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கொடுத்த புகாரின் பேரில் பாஜக அலுவலகம், கல்பாக்கம் அணுமின் நிலையம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பலத்த போலீஸ்பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடிதத்தை அனுப்பியது யார்? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.

Leave a Reply