மனிதாபிமான அடிப்படையில் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் செய்யவேண்டிய கடமையை பிரதமர் மோடி செய்து இருக்கிறார். இது விளம்பரத்துக்காக நடத்தப்பட்டசெயல் அல்ல. அப்படி விளம்பரம் தேடவேண்டிய நிலை பா.ஜனதாவுக்கு இல்லை.

ஒவ்வொரு விசயத்திலும் நுணுக்கமான சிலவிசயங்கள் இருக்கும். அடிப்படையான எல்லா செயல்களுக்கும் விளக்கம்கேட்பது முறையாக இருக்காது. ஒருபிரதமராக இருந்து நாட்டு மக்களுக்கு நிறைவேற்ற வேண்டிய கடமையை செய்திருக்கிறார்.

இதை அரசியல் நாடகம் என்று, அரசியல் நாடகம் ஆடிக் கொண்டிருப்பவர்களுக்கு இப்போது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

இந்திய வரலாற்றில் மோடி ஒரு சரித்திரத்தை ஏற்படுத்தியுள்ளார் . விடுதலையான மீனவர்களிடம் நான் பேசிக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் உணர்ச்சி பெருக்குடன் 'மரணத்தின் வாயில்வரை சென்ற எங்களை பிரதமர் மோடி மீட்டுவந்து எங்கள் உயிரை காப்பாற்றி மறுவாழ்வு கொடுத்துள்ளார். மோடியை தவிர யார்பேசினாலும் ராஜபக்சே கேட்டிருக்க மாட்டார்' என்றார்கள்.

பிரதமர் அலுவலகமும், வெளியுறவுத் துறையும் எடுத்த தொடர் முயற்சியால் இந்த சரித்திர நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதற்காக தமிழகமக்கள் என்றும் நன்றிக் கடன் பட்டுள்ளார்கள்.

என்று அவர் கூறினார்.

Tags:

Leave a Reply