2011 ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டு ஸ்ரீலங்கா அரசால் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட ஐந்து தமிழக மீனவர்களை ஸ்ரீரிலங்கா அதிபர் மகிந்தா ராஜபக்‌ஷே தன் சிறப்பு அதிபர்பதவி அதிகாரத்தை பயன் படுத்தி விடுவித்து –அவர்கள் 21.11. அன்று நள்ளிரவு இந்தியா வந்து சேர்ந்ததும் நாமறிந்ததே..

தூக்கு தண்டனையில் இருந்து மீனவர்கள் விடுதலை ஆவதற்கு காரணமான இந்திய பிரதமர் நரேந்திர மோடியை எல்லா இந்திய பத்திரிக்கைகளும், அரசியல் தலைவர்களும், பாராட்டி அறிக்கை விடுத்தனர்–தலையங்கம் எழுதினர்..கலைஞரும், காங்கிரஸ் கட்சியும் கூட பாராட்ட தயங்க வில்லை..கி.வீரமணி கூட பெருந்தன்மையோடு பாராட்டு தெரிவித்தார்..

மனித நேயத்தை கட்சியின் பேரில் மட்டும் கொண்ட ஒரேஒரு மனிதர் மட்டும் பாராட்ட மனமின்றி தவித்தார்.பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருளில் மூழ்கிவிடுமா?அவர் பாராட்டும் காலமும் ஒருநாள் நிச்சயம் வரும்..

எனக்கு மீனவர்களை விடுவித்த மோடிக்கு கிடைத்த பாராட்டுதல்களை பற்றிய எந்த ஆச்சரியமும் இல்லை..மீனவர்கள் விடுதலைக்கு மோடிக்கு எந்த பங்கும் இல்லை என அவரை முழுவதுமாக ஒதுக்கும் கட்சிகள்/ அமைப்புக்களின் செய்கைகளினால் எந்த வருத்தமும் இல்லை..மோடி நின்றாலும் நடந்தாலும், உறங்கினாலும் விழித்தாலும், விமர்சனம் செய்பவர்களுக்கு அது பிழைப்பு.. அதில் நான் மண்ணைப்போட தயாரில்லை..பிழைத்துப்போகட்டும்..

ஆனால் இரண்டு பேரின் பேச்சு/எழுத்து பற்றி..என் கருத்தை கூற கடமை பட்டுள்ளேன்..

ஒன்று இந்து பத்திரிக்கை..அதில் "தி இந்து " தமிழ் நாளிதழின் 22ந்தேதி தலையங்கத்திற்கு என் பாராட்டுதல்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மோடிக்கு பாராட்டு தெரிவித்ததற்காக அல்ல..துணிவாக..அண்டை நாடுகளுடன், குறிப்பாக ஸ்ரீலங்காவுடன் நட்புறவு கொண்டால் மட்டுமே, சீனாவின் ஆதிக்கத்தை ஸ்ரீலங்கா பிராந்தியத்தில் குறைக்க முடியும் என்பதையும், ராஜ்ஜிய உறவுகள் வலுவாக இருந்தால் மட்டுமே இதுமாதிரி பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்பதையும், இதற்குமேல், தமிழ்நாட்டு கட்சிகளின் "கூக்குரல்கள்" ஆர்ப்பாட்டங்கள்"– ஸ்ரீலங்கா தமிழர்களுக்கு.எந்த பயனையும் தராது என்பதையும், தைரியமாக எழுதியதற்கு "தி இந்து" தமிழ் நாளிதழுக்கு மீண்டும் எனது பாராட்டுக்கள்..

எவ்வளவு அநாகரீகமான உணர்ச்சிகளை தூண்டும் அறிக்கைகளையும் பேட்டிகளையும் மற்ற கட்சிகள் கொடுத்தாலும், உணர்ச்சிவயப்படாமல், அமைதியாக , ஆணித்தரமாக மோடி அவர்கள் செயலில் வெற்றியை கண்பிப்பார்கள், என்கிற தமிழக பாஜகவின் நிலை பாட்டிற்கு கிடைத்த வெற்றி இது..

தமிழ் பதிப்பில் மோடியை பாராட்டிய "இந்து" ஆங்கில பதிப்பில் அதன் உண்மை முகத்தை காட்டியது.. மீராசீனிவாசன் என்பவரை எழுதவிட்டு,– மீனவர்கள் விடுதலைக்கு இந்தி சினிமா நடிகர் சல்மான் கான் மற்றும் ராஜபக்‌ஷேவின் மகனின் நட்பும் ஒருகாரணம், என்று எழுதி தனது "மோடி எரிச்சலை" காட்டிக்கொண்டது..

"மண்டபத்தில் போணி ஆகாமல் ஈ ஓட்டும் ஆங்கில எழுத்தாளர்களை" கூட்டிவ்ந்து கட்டூரை எழுதி இன்னும் மோடி தூஷணைகளை இந்து தொடர்துகொண்டுதான் இருக்கிறது..

காங்கிரசை உடைத்து வெளியே வந்துள்ள ஜி.கே .வாசனும், மீனவர்கள் விடுதலை கூட்டு முயற்சி–மோடிக்கு மட்டுமே இது சொந்தமில்லை என்று திருவாய் மலர்ந்து உள்ளார்..

இவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் என்ன செய்தார்கள்? என்பதை நாம் கேட்கமாட்டோம் என்று வாசன் நினைக்கிறார் போல் உள்ளது..இந்த கூட்டு முயற்சி கூப்பாடுகள் எல்லாம் "மோடி வயிற்றெரிச்சல் காரர்களின் " –"அல்சர் அளவீடுகள்" தான் என்பதை நாம் புரிந்து கொண்டால் சரி..

அம்மா வீட்டிற்குள் "ஹாயாக" அடை பட்டிருந்தாலும், ரத்தத்தின் ரத்தங்கள், விடுதலையான மீனவர்களுக்கு "உதவித்தொகை"–கையிலே கொண்டுவந்து நேரிலே ஏர்பொர்ட்டிலேயே கொடுத்து, "விடுதலை உரிமையை"–"விலைக்கு வாங்க " முயற்சித்தது, தோல்வியில் முடிந்தது என்னவோ "பன்னீருக்கு" வேதனைதான்..

"நாங்கள் உயிர் தப்பியதற்கு மோடிதான் காரணம்" என மீனவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்ததை, ஏனோ அதிமுகவினரால், தடுக்க முடியவில்லை..

இந்த விடுதலையினால் இரண்டு பேருக்கு மகிழ்ச்சி….ஒன்று, மீனவர் குடும்பங்கள், மற்றும் மீனவ சமூதாயத்திற்கு, இரண்டு தமிழ் மக்களுக்கு…இந்த மகிழ்ச்சி ஒரூ சிலருக்கு அதிர்ச்சி..

ஆம்.. மீனவர் பிரச்சினை என்ற பெயரில், தினசரி ஆற்பாட்டங்கள்–அறிக்கைகள், மட்டுமே வெளியிட்டு, "கல்லாகட்டிய" ஒருசில் கட்சிகள் மற்றும் லெட்டர் பேட் இயக்கங்களுக்கு, இனி மூடுவிழாதான்..கல்லா கட்டியவர்கள், கடையை கட்ட வேண்டியதுதான்..

மோடியின் தெளிவான–திடமான –தீர்க்கமான முடிவெடுப்புக்கள், காங்கிரசை வீட்டுக்கு அனுப்பியது..

கம்யுனிஸ்ட் கட்சிக்கு மூடுவிழா நடத்தியது..

சிவசேனாவின் "கொலஸ்ட்ராலை" குறைத்தது.

இவ்விடுதலை மூலம் தமிழகத்தில், சில "தகர டப்பா சத்தங்களை" மோடி "நிசப்த்தப் படுத்திவிட்டார்"

ஆக்கபூர்வ உறவின் மூலம் ஸ்ரீலங்காவை வெல்வோம்..அங்குள்ள தமிழ் மக்களுக்கு நல்வாழ்வு அளிப்போம்

கூப்பாடு போட்டு ஏமாற்றுவோரை அறிந்து கொள்வோம்–புரிந்து கொள்வொம்–ஒதுக்கி வைப்போம்–இதுவே இவ்விடுதலையின் செய்தி..

.எஸ்.ஆர்.சேகர்
மாநில பொருளாளர்–பாஜக

Leave a Reply