இந்தியர்கள் சுவிட்சர்லாந்து உள்பட பல வெளி நாடுகளில் உள்ள வங்கிகளில் தங்கள் கருப்புபணத்தை வைத்துள்ளனர். இந்த கருப்புபணத்தை மீட்போம் என்று பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதற்கான நடவடிக்கைகளும் இப்போது எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் எதிரொலியாக ஒரு வெளிநாட்டு வங்கியில் கருப்புபணத்தை வைத்துள்ள இந்தியர்களின் முதல் பட்டியல் வெளியானது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் கருப்பு பணத்தை மீட்பதற்கு மேலும் வழிகளை காண வேண்டும் என்று வருவாய்த் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

கருப்பு பணத்துக்கு இரட்டைவரி விதிக்கும் இருநாட்டு ஒப்பந்தத்தை தவிர வேறுவழிகளை காணும் படி பிரதமர் அலுவலகம் கூறியுள்ளதாக டெல்லிவட்டாரம் தெரிவித்துள்ளது. வரி தொடர்பான இரு நாட்டு ஒப்பந்தம் அல்லது இரட்டை வரிவிதிப்பை தவிர்க்கும் ஒப்பந்தம் தான் கருப்பு பணத்தை வைத்திருக்கும் வங்கிகளிடம் இருந்து தகவலை பெற ஒரேவழி என்று வருவாய்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.

Leave a Reply