நேபாளத்தின் தலை நகர் காத்மாண்டுவில் நடைபெற்று வரும் சார்க் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாதான் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று தெரிவித்துள்ளார் .

மேலும் அவரது உரையில், உலகம் முழு வதும் அண்டை நாடுகளுடன் நல்ல உறவு இருக்கவேண்டும். பொருளாதார மேம்பாடு மிகப் பெரிய சவாலாக உள்ளது.

சுற்றுலாவை மேம்படுத்துவதில் சார்க்நாடுகள் கவனம்செலுத்த வேண்டும். தெற்காசிய நாடுகளுக்கு விமான சேவையை விரிவு படுத்துவது சுற்றுலாவை மேம்படுத்த உதவும். இந்தியாவில் உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக கவனம்செலுத்தப்படும்.

கிராமங்களுக்கு மின்சாரம் வழங்க சூரியசக்தியை பயன்படுத்த வேண்டும். இந்திய சந்தைக்கான பொருட்களை பிற தெற்காசிய நாடுகள் உற்பத்திசெய்ய வேண்டும்.

ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள நிறைய உள்ளன. இந்தியாவுக்காக நான் காணும் கனவு தெற்காசிய நாடுகளுக்குமானது. தெற்காசிய நாடுகளில் இருந்து மருத்துவ உதவிக்காக இந்தியா வருபவர்களுக்கு உடனடி விசா வழங்கப்படும்.

2016ஆம் ஆண்டில் சார்க் நாடுகள் சார்பில் செயற்கைக் கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. நெருக்கடி காலங்களில் சார்க் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

Leave a Reply