இருபது நாட்களாக சோக கருள் சூழ்ந்திருந்த ராமேஷ்வரப் பகுதி மீனவர்களின் வீடுகளில், 5 மீனவர்களின் விடுதலை குறித்த அறிவிப்பால் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்துள்ளது. ஐவரின் விடுதலைக்குக் காரணம், ராஜபக்சேவுக்கு அழுத்தம் கொடுத்த இந்திய பிரதமர் நரேந்திர மோடிதான் என்று கூறப்படுகிறது. அடுத்த அதிரடியை ஜனவரியில் மோடி நிகழ்த்துவார் என்கிறது டெல்லி வட்டாரம்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை மீனவர்கள் 3 பேருடன் ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த வில்சன், எமர்சன், அகஷ்டஷ், பிரசாத், லாங்க்லேட் ஆகிய 5 மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தது. 'ஹெராயின்' என்ற போதைப்பொருள் கடத்தியதாக வழக்குபதிவுப் செய்து 5 பேரையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். மல்லாகம் கோர்டில் நடந்து வந்த இந்த வழக்கில் நீதிபதி பத்மசூரசேன அக்டோபர் 3௦-ம்தேதி தீர்ப்பு வழங்கினார். தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் மற்றும் இலங்கை மீனவர்கள் 3 பேர் ஆகிய 8 பேருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

தீர்ப்பைக் கேட்டு தமிழகமே கொந்தளித்தது. தமிழக மீனவர்கள் ர்ராமேஸ்வரத்தில் குவிந்து உண்ணாவிரதம் உள்ளிட பல்வறு போராட்டங்களில் ஈடுப்பட்டனர். தமிழக அரசும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்தது.

இந்நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேரடியாகப் பேசியதாகவும் 5 தமிழக மீனவர்களுக்கும் பொதுமன்னிப்பு வழங்குவதாகக் கூறியதாகவும் செய்தி வெளியானது. அதே போல் கடந்த 18-ம் தேதி இலங்கை அரசு அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட, தங்கச்சிமடமே மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்தது.

விடுதலை அறிவிப்பை வெளியானதும் சிறையில் இருந்த 5 மீனவர்களும் இலங்கை அமைச்சர் ஆறுமுக தொண்டைமானின் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

அதன் பிறகு அவர்கள் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரி யாஷ்குமார் சின்காவிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்திய தூதரகம் சென்ற ஐவரில் லாங்லெட், அங்குள்ள தூதரக அதிகாரி ஒருவரிடம் இருந்து போனை வாங்கி, தங்கச்சிமடத்தில் உள்ள தனது தாய் இன்பென்றாவிடம், 'அம்மா எங்களை விடுதலை பணிட்டாங்க. விரைவில் ஊருக்கு வந்துருவோம்' என்றார். இதனைக் கேட்டதும் குடும்பத்தினர் மகிழ்ந்தனர். அதையடுத்து இவர்கள், நேற்று பிற்பகல் விமானம் மூலம் திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதுபோலவே தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட மற்ற மீனவர்களான அகஷ்டஷ், பிரசாத், லாங்லேட் மற்றும் வில்சன் ஆகியோரது வீடுகளிலும் மகிழ்ச்சி நிலவியது. இந்த தகவலறிந்தவுடன் நவம்பர் 19-ம் தேதி தங்கச்சிமடத்தில் மீனவர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர். இதுபோலவே 5 மீனவர்களின் வீடுகளுக்குச் சென்று லட்டு கொடுத்துக் கொண்டாடினர்.

அதேவேளையில் இலங்கை மீனவர்களான முத்துராசா கமல்கிரிஷ்டியன், கீர்திராசா கில்சன், ஜானப்பிரகாசந்துசாந்தன் ஆகிய மூவருக்கும் தூக்கு தண்டனையிலிருந்து பொதுமன்னிப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக மீனவர்கள் இன்னும் 24 பேரர் இலங்கைச் சிறையில் வாடுவதாக தகவல்கள் வருகின்றன. அவர்களை மீட்பதுடன், கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கவும் வலைகளை உலர வைக்கவும் உரிமையை மோடி கேட்டுப்பெறுவார் என்றும் இந்திய தூதரக அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. இதற்காக மோடி வரும் ஜனவரி மாதம் இலங்கை செல்கிறார்.

அங்கே நாடாளுமன்றத் தேத்தல் முடிந்த பிறகு ஜனவரியில் நடக்கும் முதல் நாடாளுமன்றக் கூட்டத்தில் மோடி உரையாற்ற இருக்கிறார். அப்போது, தமிழக மீனவர்களை மீட்பதுடன் கச்சதீவு உரிமையையும் வாங்கிவிடுவார் என்று அந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் மீனவர்கள் விடுதலையானது தொடர்பாக தமிழக பா.ஜ.க வின் தேசிய தலைவர் அமித்ஷாவை அழைத்துவரவும் ஏற்பாடுகள் நடக்கின்றன.

நன்றி ரிப்போட்டர்

Leave a Reply