காத்மண்டுவில் நடைபெற்ற சார்க் உச்சிமாநாட்டின் பெரும் பகுதிகளில் ஒருவரை யொருவர் கண்டு கொள்ளாத நவாஸ்ஷெரிப் மற்றும் மோடி இறுதியில் கைகுலுக்கிக் கொண்டனர்.

18-வது சார்க் உச்சிமாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் புதன்கிழமை தொடங்கியது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்தமாநாட்டில் 8 தெற்கு ஆசிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.

பிரதமர் நரேந்திர மோடியும் நவாஸ் ஷெரீப்பும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் முதல் நாள் பேசிக்கொள்ளவில்லை . இருவருக்கும் நடுவே மாலத் தீவு மற்றும் நேபாள நாட்டு தலைவர்கள் மட்டுமே இருந்த நிலையிலும் இருநாட்டுத் தலைவர்களுக்கும் இடையே கைக்குலுக்கள் போன்ற முறைரீதியிலான விசாரிப்புகள் எதுவும் நடக்கவில்லை.

மேலும், சுமார் 3 மணிநேரம் நடைபெற்ற மாநாட்டில் பேசும்போதும் இரு தலைவர்களும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

ஆனால் இன்று சார்க் உச்சிமாநாட்டின் இறுதி அமர்வின் போது பிரதமர் நரேந்திர மோடியும், பாக்பிரதமர் நவாஸ் ஷெரிப்பும் ஒருவரை நோக்கி ஒருவர் சிரித்தபடியே கைகுலுக்கிக் கொண்டனர்.

இருவரும் வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர். ஆனால் அதிகார பூர்வ பேச்சு வார்த்தைகள் எதுவும் நடைபெற வில்லை என்றும் மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply