சேதுசமுத்திர திட்டத்தை மாற்று பாதையில் செயல் படுத்துவது குறித்து மத்திய அரசு ஆராய்ந்துவருவதாக மத்திய கப்பல் போக்குவரத்து துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், "ராமர் பாலத்தை விடுத்து, சேதுசமுத்திர திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு ஆராய்ந்துவருகிறது.

முதற்படியாக, ரயில் இந்தியா தொழில் நுட்பம் மற்றும் பொருளாதார சேவைகள் (ரைட்ஸ்) அமைப்பு மாற்றுப் பாதையில் சேது திட்டத்தை செயல்படுத்த முடியுமா என்பதை ஆய்வுசெய்து தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

இந்த அமைப்பின் பரிந்துரை தமிழக அரசின் ஒப்புதலை பெறவேண்டி யிருக்கிறது. பாம்பன் பாதை, தமிழக அரசின் எல்லைக் கட்டுப் பாட்டுக்குள் வருவதால் தமிழக அரசின் ஒப்புதல் அவசியமாகிறது" என பேசினார்.

Leave a Reply