பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசுவதை ஏற்கமுடியாது என்று மத்திய இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது; மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பிரதமர் நரேந்திர மோடியை அவதூறாக பேசிவருவதை ஏற்க முடியாது. ஆவேச அரசியல் நடத்தலாம். ஆனால் ஆவேச அரசு நடத்தக் கூடாது. அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் உள்ளார்.

கர்நாடக அரசு காவிரியில் புதியஅணை கட்டுவதை ஏற்கமுடியாது. சட்ட பேரவையில் தி.மு.க. தலைவர் கருணாநிதி அமர்வதற்கு இருக்கை அமைத்து கொடுத்தால் அரசுக்கு நற்பெயர் உருவாகும் . திருக்குறள் போன்று பாரதியார் பாடல்களையும் இந்தியா முழுவதும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

ஜி.கே.வாசன் புதியகட்சி தொடங்கியதற்கு வாழ்த்துதெரிவித்து கொள்கிறேன்.என்று அவர் கூறினார்.

Leave a Reply