கூட்டாட்சி தத்துவத்தை பலப் படுத்தும் வகையில், திட்டக் குழுவிற்கு மாற்றாக அமைக்கப்படும் புதிய அமைப்பில் மாநில அரசுகள் முக்கியபங்கு வகிக்கும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற முதலமைச் சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திரமோடி, திட்டக் குழு முழுமையாக மாற்றியமைக்க வேண்டியுள்ளது . மாநிலங்களின் வளர்ச்சி இல்லாமல் நாட்டினை வளர்ச்சியடைய செய்யமுடியாது என்றார். ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர்கள் அனைவரும் முக்கியத்துவம் வாய்ந்த கருத்துகளை பகிர்ந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

முறைப்படி நடைபெற்ற கூட்டத்தைத்தொடர்ந்து, முதலமைச்சர்களுடன் மோடி தனிப்பட்ட முறையில் கலந்துரையாடினார். கூட்டத்திற்குபிறகு செய்தியாளர்களிடம் பேசிய மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி, திட்டக் குழுவை மாற்றியமைப்பது தொடர்பாக மாநில அரசுகளின் கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply