காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா மாவட்டம் உரிபகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலியானார்கள்.

இந்நிலையில் நரேந்திர மோடி திட்டமிட்டபடி காஷ்மீரில் இன்று தேர்தல் பிரசாரம் செய்வார் என்று பா.ஜ.க அறிவித்துள்ளது.

இது குறித்து முன்னாள் மத்திய மந்திரியும், பா.ஜ.க தலைவர்களில் ஒருவருமான ஷாநவாஸ் உசேன் கூறியதாவது:–

பிரதமர் நரேந்திரமோடி திட்டமிட்டபடி காஷ்மீரில் நாளை பிரசாரம்செய்கிறார். அவரது நிகழ்ச்சியில் எந்த மாற்றமும் இல்லை. காஷ்மீர்மாநில மக்கள் பிரதமருக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். குண்டுவெடிப்பு சத்தத்துக்கு இடையே பாகிஸ்தானுடன் பேச்சுநடத்த இயலாது என்று பிரதமர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பாகிஸ்தான் இது வரை தவறுகளில் இருந்து பாடம் கற்று கொள்ளவில்லை. பாகிஸ்தானின் ஒவ்வொரு தவறான செயல் களுக்கும் பதில் அளிக்க மோடி தயாராக இருக்கிறார். இந்த தாக்குதலில் அப்பாவிமக்கள் தான் கொல்லப்படுகிறார்கள்.

காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும். இதற்கான தீர்மானம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்டு இருக்கிறது. பொதுவாக்கெடுப்பு தேவையில்லை. அதற்கானவழியும் இல்லை. காஷ்மீர் மக்களுக்கு சேவை செய்வதை பா.ஜனதா தேசிய கடமையாக கருதுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply