கால் டாக்சி'யில் இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், டில்லி போலீசாருக்கு நெருக்கடி உருவாகியுள்ளது . தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜீத்தோவல், இது குறித்து டில்லி போலீசாரிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

தலைநகர் டில்லியில், சமீபத்தில், 'உபெர்' நிறுவனத்தின் கால்டாக்சியில் சென்ற இளம்பெண், அதன் டிரைவரால் பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டார்.இது, நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உருவாக்கியது . பார்லிமென்ட்டிலும் இந்த விவகாரம் எதிரொலித்தது. இதையடுத்து, பாலியல் பாலத்காரத்தில் ஈடுபட்ட டிரைவர் கைதுசெய்யப்பட்டார். விதி முறைகளை மீறி செயல்பட்ட உபெர் நிறுவனத்தின் சேவையும் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், டில்லியில் சட்ட – ஒழுங்கு மோசமாக உள்ளதாக குற்றச் சாட்டுகள் எழுந்ததை தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரவின்படி, தேசி பாதுகாப்பு ஆலோசகர் அஜீத் தோவல், இந்த விஷயத்தில் தலையிட்டுள்ளார்.

நடந்த சம்பவம்குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, டில்லி போலீஸ் கமிஷனர் பாஸ்ஸிக்கு, அஜீத்தோவல் உத்தரவிட்டுள்ளார்.தற்போது, சட்ட சபை தேர்தல் பிரசாரத்துக்காக, பிரதமர் நரேந்திர மோடி, ஜார்க்கண்டில் முகாமிட்டுள்ளதால், அவர் டில்லி திரும்பியதும், அவருடன் இது குறித்து ஆலோசனை நடத்த அஜீத் தோவல் முடிவுசெய்துள்ளார்.

Tags:

Leave a Reply