பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்ற வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜின் கோரிக்கை க்கு மாநிலங்களவையில் எதிர்க் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. கேள்வி நேரத்தின்போது இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா பேசுகையில், ''பகவத் கீதை பற்றி

சுஷ்மாவின் கோரிக்கையை இந்த அவை நிராகரிக்கவேண்டும்'' என்றார். இதற்கு பதில் அளித்த நாடாளுமன்ற விவகார துறை இணை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி, ''பகவத் கீதை மதநூல் அல்ல, தனிமனித செயல்பாடுகள் பற்றியது. நமது பாரம்பரியம் மற்றும் பண்பாடு குறித்து பேசினாலே, மதச்சார்பின்மைக்கு ஆபத்து என்று சிலர் பேசுகின்றனர். பகவத்கீதையால் நாடே பெருமைப்படுகிறது'' என்றார்.

Leave a Reply