ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், உப்புசத்தையும் போக்கும். வயிற்றுக் கடுப்பை நீக்கிக்கொள்ள ஆப்பிள் சாப்பிடலாம். இதிலுள்ள பெக்டின் இருமலைப் போக்கும். உடலிலுள்ள நச்சுக் கழிவை ஆப்பிள் வெளியேற்ற உதவுகிறது. வயிற்றில் அமிலத்தன்மை கூடிவிட்டால், ஆப்பிள் தின்று சரிசெய்துவிடலாம். வயிறு, மூளை, இதயம், கல்லீரல், முதலிய பாகங்களை வலுப்படுத்துகிறது. பசியெடுக்க வைக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கவும் செய்கிறது.

குழந்தையின் வயிற்றுப்போக்குக்கு அருமருந்து ஆப்பிள். சிறுநீரகம், கல்லீரல்களைக் காக்கிறது. கீல்வாதம், மூட்டுவாத நோய்களுக்கு ஆப்பிள் மருந்தாகிறது. தேனுடன் கலந்து ஆப்பிள் சாரை அருந்தலாம். நரம்பு மண்டல பலவீனத்தையும், சிறுநீரகக் கல், அமிலச் சுரப்பு, செரிமானமின்மை, தலைவலி, ஆஷ்துமா, வயிற்றுப் பொருமல், வயிற்றுக் கடுப்பு போன்ற நோய்களுக்கு ஆப்பிள் சாறு நிவாரணமளிக்கிறது.

ஆப்பிளைக் கடித்துச் சுவைத்துத் தின்னும்போது அதிலுள்ள லேசான அமிலம் வாய் மற்றும் பற்களிலுள்ள நோய்கிருமிகள் அனைத்தையும் கொன்றுவிடும்.

 

ஆப்பிளில் பொதுவாக மாவுப்பண்டம் சிறிதளவு இருக்கும். அது பழமாகிற நிலையில் சர்க்கரையாக மாற்றப்பட்டு விடும்.

சிலர் ஆப்பிளின் தோலை சீவி எரிந்து விட்டுப் பழத்தை உண்பார்கள். உண்மையில் சதைப்பற்றான பகுதியைவிட தோலிலும், அதனடியில் உள்ள கதுப்பிலும் அதிக அளவு வைட்டமின் சி இருக்கும். ஆப்பிளில் உள்ள வைட்டமின் அதன் மையப் பகுதியில் குரைந்து காணும். உள்ளிருக்கும் சதைப்பற்றைவிட தோலில் உள்ள வைட்டமின் ஏ ஐந்து மடங்காகும்.

பலன்களும் மருத்துவக் குணமும்
உடல் நலத்திலும், பிணி அகற்றுவதிலும் ஆப்பிளுக்குரிய பங்கு அளவிட்டுரைக்க முடியாதது ஆகும்.

ஆப்பிளில் காணப்படும் பெக்டின் என்ற பகுதிப் பொருள் உடம்பின் நச்சுத்தன்மை அகற்ற உதவும். உணவுப்பாதையில் புரதப்பொருள் சிதைந்து விடாமல் தடுக்கும். ஆப்பிளில் உள்ள அமிலம் குடலுக்கும், கல்லீரலுக்கும் மூளைக்கும் நல்லது.

சோகை
ஆர்செனிக், பாஸ்பரஸ் மற்றும் அயச்சத்து நிரம்பிய பழம் ஆப்பிள். இரத்த சோகை சிகிச்சையில் நல்ல பலனை அளிக்கும் குறிப்பாக புத்தம் புது ஆப்பிள் சாறு ரொம்பவும் உபயோகமாக இருக்கும். தினம் 1கிலோ ஆப்பிள் சாப்பிட்டு வர கணிசமான பலன் உண்டு.

ஆப்பிள் சாறு உண்ண சிறந்த நேரம் உணவுக்கு முந்தைய அரைமணி மற்றும் படுக்கைக்குச் செல்கிற நேரம் ஆகும். தேர்ந்த பழங்களைக் கழுவி, அரைத்து பானம் தயாரிக்கப்பட வேண்டும்.

மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு
ஆப்பிளை பச்சையாக அப்படியே சாப்பிடுவது மலச்சிக்கலுக்கு நல்லது. வேகவைத்த ஆப்பிள் வயிற்றுப் போக்குக்கு நல்லது, மலத்தை முறையாக வெளியேற்ற தினமும் இரண்டு ஆப்பிள்களை உண்ணலாம். ஆப்பிளை வேகவைக்கிறபோது அதில் உள்ள செல்லுலோஸ் மிருதுப்படும். குழந்தைகளுக்கு வரும் சீதபேதி, வயிற்றுக் கடுப்பை குணப்படுத்த உதவும். பழுத்த சுவையான ஆப்பிள்களை கூழாக்கி நாளொன்றில் பல முறை கொடுத்து வந்தால் உபாதை நீங்கும்.

வயிற்றுக் கோளாறுகளுக்கு ஆப்பிளை வேக வைத்துப் பிசைந்து கொடுக்கலாம். அதில் இலவங்கப் பொடி அல்லது தேனை தெளித்துக் கொள்ளலாம். ஆப்பிளை விழுங்குவதற்கு முன் நன்றாக மெல்லவேண்டும். இரண்டு உணவுக்கு இடையில் பல முறை இந்தத் தயாரிப்பை உண்ணலாம்.

'பெக்டின்' என்கிற மருந்துப்பொருள் ஒரு பாதுகாப்பான செயல்பாட்டை உருவாக்கும். உறிஞ்சும் தன்மையும் எரிச்சல் நீக்குவதும் அதன் பண்புகள்.

ஆப்பிளை சிறுதுண்டுகளாக்கி அத்துடன் ஒரு மேசைக்கரண்டி தேன் கலந்து, எள் தூவிக்கொள்ள அது ஒரு டானிக்காகவும், பசியைத்தூண்டும் பொருளாகவும் செயல்படும். சாப்பாட்டுக்கு முன்பு இந்தக் கலவையை உட்கொள்ள வேண்டும்.

தலைவலி
அனைத்து வகை தலைவலிகளுக்கும் ஆப்பிள் அருமருந்தாக அமையும். தலைவலியால் அவதிப்படுகிறவர் ஆப்பிளின் தோலையும், கடினப்பகுதியையும் அகற்றிவிட்டு சதைப்பகுதியுடன் சிறிதளவு உப்பு சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வரவேண்டும். இவ்விதமாக தொடர்ந்து ஒருவாரம் சாப்பிட வேண்டும்.

இருதய நோய்
ஆப்பிள்களில் அதிக அளவு பொட்டாசியம், பாஸ்பரஸ் சத்துகளும் குறைந்த அளவு சோடியமும் உண்டு. இருதய இயக்கக் கோளாறுகளுக்கு ஆப்பிளுடன் தேன்கலந்து உண்பது ரொம்ப காலமாகவே பரிந்துரைக்கப்படுகிற ஒன்று. உணவு வகைகளில் இருந்து அதிக அளவு பொட்டாசியத்தை நுகர முடிகிறவர் இருதயத் தாக்குதலில் இருந்து தப்ப முடியும். இது கலிபோர்னிய பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த டாக்டர் எலிசபத் பேரட் கானர் என்பாரின் கருத்து. ஆப்பிள் பொட்டாசியத்தின் சிறந்த மூலம் என்பதால், இருதய நோய்த் துன்பத்தை குறைப்பதில் பெருமளவு உதவும்.

உயர் இரத்த அழுத்தம்
உயர் இரத்த அழுத்தத்தைப் பொறுத்தவரை ஆப்பிள் விலைமதிக்க முடியாததாகும். சிறுநீர்ப் போக்கை அதிகரிப்பதன் மூலம் இரத்த அழுத்தத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவரும். உப்பு விநியோகத்தைக் குறைப்பதன் மூலம் சிறுநீரகத்தின் வலி, வேதனைகளைக் குறைக்கும். ஆப்பிளில் பொட்டாசிய அளவு கூடியதால் திசுக்களின் உப்பு அளவு தன்னால் மட்டுப் படுகிறது.

சிறுநீரகக் கற்கள்
முற்றிலும் பழுத்த புதிய பழங்கள் பலனளிக்கும். இனிப்பூட்டப்படாத, இயற்கையான பானங்களை அருந்துகிறவர்களுக்கு சிறுநீரகக்கற்கள் உருவாவது இல்லை.

பற்கோளாறுகள்
வாயை சுத்தப்படுத்தும் பண்பு ஆப்பிளுக்கு உண்டு. தொடர்ந்து ஆப்பிளைப் பயன்படுத்திவர பற்சிதைவைத் தடுக்கமுடியும். வாயில் உமிழ் நீர் ஊறுவது பற்களுக்கு நல்லது. ஆப்பிளில் உள்ள அமிலத்தன்மை உமிழ் நீரை ஊறவைக்கும். ஆப்பிளை மென்று தின்கிறபோது பற்களுக்கும், ஈறுகளுக்கும் அந்த அமிலம் ஒரு நச்சுத்தடை ஏற்படுத்திதரும்.

ஆப்பிள் உடம்பின் முக்கிய உறுப்புகளுக்கு வலிமையளிக்கும். பாலுடன் தொடர்ந்து ஆப்பிளை உட்கொண்டு வந்தால் ஆரோக்கியம் மேம்படும், இளமை பொலிவுபெறும். சருமம் பளபளப்படையும். அமர்ந்து வேலை செய்கிறவர்களுக்கு, பெரும்பொழுதை அமர்ந்தே கழிப்பவர்களுக்கு ஆப்பிள் முறுக்கேறிய உணர்வுகளில் இருந்து விடுபட உதவும்.

பொதுவாக ஆப்பிளை அப்படியேதான் சாப்பிடுவது, உலர்ந்ததாகவோ, ஜெல்லியாகவோ, சாறாகவோ வினிகருடனோ உபயோகிக்கலாம்.

வெறும் வயிற்றில் ஆப்பிள் சாப்பிட்டால் அசீரணக் கோளாறு ஏற்படும். ஆப்பிள் அழுகிவிடாமல் இருக்க ரசாயன மருந்து தெளிக்கிற நிலை இருக்கும். எனவே ஆப்பிளை நன்கு கழுவிய பிறகே உபயோகிக்க வேண்டும்.

மூளைக் கோளாறை குணப்படுத்தும் பாஸ்பரஸ் ஆப்பிளில் உள்ளது. இதனால் மூளைக்கோளாறு உள்ளவகளுக்கு ஆப்பிள் கட்டாய உணவாக கொடுக்க வேண்டும்.

தூக்கத்தில் நடமாடும் வியாதிக்காரர்களுக்கு இரண்டு ஆப்பிளை தண்ணீரில் ஊறவைத்து, மறுநாள் காலையில் அரைத்துப் பாலில் கலந்து கொடுக்கலாம்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.