ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் பயன்படும்.

வாயைச் சுத்தமாக்குகிறது. காய்ச்சலுக்கும் அருமருந்து. அடிவயிற்று வலியைக் குறைக்கும். குடற் புழுக்களை அழிக்கும். எலும்புகளை வலுப்படுத்துகிறது.

மலச்சிக்கலுக்கு ஆரஞ்சு பழங்களை இரவு படுக்கும் முன்பு ஒன்றிரண்டு தின்றுவிட்டுப் படுக்கலாம். இதனால் மலச்சிக்கல் உள்ளவர்கள் பெரிதும் பயன் அடையலாம்.

ஆஷ்துமா மற்றும் நெஞ்சக நோயாளிகளுக்கு ஆரஞ்சு நல்லது. காய்ச்சலின்போது, நோயாளிக்கு அருமருந்து ஆரஞ்சு. உடலுக்கு தெம்பு கூட்டும். செரிமானத்தை சரியாக்கி பசியைத் தூண்டும். குடல்களின் இயக்கத்திற்கு வலுச்சேர்க்கும்.

கர்ப்பகாலப் பெண்மணிகளுக்கு ஏற்படும் குமட்டலுக்கு சிறந்தது ஆரஞ்சு. செரிக்காத உணவால், வயிற்றில் பொருமலுடன் உள்ளவர்கள் ஆரஞ்சு சாரை குடித்தால் பலன் கிடைக்கும்.

 

ஆரஞ்சு பழத்தை இயற்கையின் இனிய வரம் என்று சொல்லலாம். இருமல், ஜலதோஷம், சுரம், கீல்வாதம், மூட்டுவலி, முழங்கால் வீக்கம், சொறி, உயர் இரத்த அழுத்தம், நரம்புச் சோர்வு, மாதவிடாய் காலத்தில் மிதமிஞ்சிய இரத்தப்போக்கு ஆகிய நிலைகளில் தக்க பரிகாரமாக அமையும்.

ஆரஞ்சுப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்தப்போக்கு, இன்ப்ளுயன்ஷா தடுக்கப்படும். ஆரோக்கியம், வலிமை, நீண்ட ஆயுளைத் தரும். ஆரஞ்சு எல்லா வயதினருக்கும் பொருந்தும். எல்லா நோய்களுக்கும் பயன்படுத்தலாம்.

அசீரணம்
நாட்பட்ட அசீரணத்துக்கு நல்ல உணவு இது. சீரான உறுப்புகளுக்கு ஓய்வை அளிக்கும். எளிதில் ஏற்றுக் கொள்ளும் விதமாக சத்துக்களை வழங்கும். சீரண ரசங்களைத் தூண்டும். சீரணத்தை மேம்படுத்தும், பசி உணர்வை அதிகரிக்கும். குடலுக்கு நட்பான பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு ஏற்ற நிலைமையை உருவாக்கும்.

மலச்சிக்கல்
மலச்சிக்கலில் நற்பலன்களை அளிக்கும். குடலின் இயக்கத்தைத் தூண்ட இரவில் படுக்கைக்குப் போகும் போதும், காலையிலும் ஒன்றின்ரண்டு ஆரஞ்சுகளை உண்ண வேண்டும். உணவுக் கழிவுகள் குடலில் தங்கிவிடாமல் தடுத்து உதவும்; அதனால் அழுகலும், நச்சுத்தன்மை அடைவதும் தவிர்க்கப்படும்.

எலும்பு, பல் உபாதைகள்
கால்ஷியம், வைட்டமின் சி க்கு சிறந்த மூலம் இது. வைட்டமின் சி மற்றும் கால்ஷியம் குறைபாட்டில் பற்கள் உபத்திரவங்களுக்கு உள்ளாகும். அந்நிலையில் போதிய அளவு ஆரஞ்சுப்பழங்களை உண்ண வேண்டும். பயோரியா, பற்சொத்தை உள்ளவர்களுக்கு நிறைய ஆரஞ்சுப் பழங்களைத் தந்து கோளாறுகளை நிவர்த்திக் கொள்ளலாம்.

குழந்தை நோய்கள்
தாய்ப்பால் அருந்தாத குழந்தைகளுக்கு சிறந்த மாற்று உணவாகப் பயன்படுத்தலாம். குழந்தையின் வயதுக்குத் தக்கபடி 15-120 மி.லி. அளவு ஆரஞ்சுப் பழச்சாறு கொடுக்கலாம். எலும்புகளை மென்மையாக்கும் கணை நோய், வைட்டமின் சி குறைபாட்டில் உண்டாகும் சொறி, கரப்பான் நோயைத் தடுக்கும். இயல்பான வளர்ச்சி பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கும் ஆரஞ்சுச் சாறு கொடுத்து வரலாம். தினமும் 60-120 மி.லி. அளவில் கொடுக்கலாம்.

இருதய நோய்
தேன் கலந்த ஆரஞ்சுச் சாறு இருதய நோய்களில் நல்ல பலனை அளிக்கும். திரவ உணவு மட்டுமே பரிந்துரைக்கப் படும். இருதய நோய்களுக்கு ஆரஞ்சுச் சாற்றுடன் தேன் கலந்து கொடுப்பது பாதுகாப்பு.

பரு
முகப்பருவிற்கு ஆரஞ்சுத் தோலை தண்ணீர் விட்டு அரைத்துப் பூசலாம். ஆரஞ்சில் மார்மலேடு, ஜாம், ஸ்க்வாஷ் தயாரிக்கலாம்.

Tags:

Leave a Reply