டெல்லி சட்ட சபை தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பாஜக வெற்றிபெறும் என கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லி சட்ட சபை தேர்தலை முன்னிட்டு ஏபிபி-நீல்சன் நிறுவனம் சார்பில் பொதுமக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.

இந்தக் கருத்துக் கணிப்பின் முடிவு நேற்று அறிவிக்கப்பட்டது. இதன் படி, டெல்லியில் உள்ள மொத்தம் 70 தொகுதிகளில் பாஜக 45 இடங்களில் வெற்றிபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஆம் ஆத்மி 17 இடங்களில் வெற்றிபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர், பாஜக வெற்றிபெற்று ஆட்சியமைக்கும் என தெரிவித்துள்ளனர். 38 சதவீதத்தினர் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் எனக் கூறியுள்ளனர்.

Leave a Reply