சாரதா நிதி நிறுவன மோசடி வழக்கில், மேற்கு வங்க மாநில போக்குவரத்து அமைச்சர் மதன் மித்ராவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். மேற்கு வங்கத்தில் சாரதா நிதிநிறுவன மோசடி தொடர்பாக, விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ அதிகாரிகள் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து

வருகின்றனர். இந்த நிலையில், மாநில போக்குவரத்து அமைச்சரும், மம்தாவின் நம்பிக்கைக்கு உரியவருமான மதன் மித்ராவை, சிபிஐ அதிகாரிகள் நேற்று கைது செய்தனர். சால்ட் லேக் பகுதியில் உள்ள சிஜிஓ வணிக வளாகத்துக்கு அவரை கொண்டு சென்ற அதிகாரிகள், தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

இதற்கிடையே, மோசடிக்கு சதித்திட்டம் தீட்டி துணை போனதாக, சாரதா நிறுவனத்தின் சட்ட ஆலோசகரான நரேஷ் பலோடியாவும் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு தொடர்பாக, திரிணாமூல் கட்சியின் துணைத் தலைவர் ரஜத் மஜூம்தார் எம்பிக்கள் குணால் கோஷ், சிரிஞ்சய் போஸ் ஆகியோரை, சிபிஐ கைது செய்து விசாரித்து வருகிறது. திரிணாமூல் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்பட்டு வருவதால், மம்தா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. –

Leave a Reply