கவிஞர்களுக்கு அரசில் பொறுப்போ, ஆட்சியில் பதவியோ தரக்கூடாது என்று கூறினார் கிரேக்க அறிஞர் ‘ப்ளூடோ’. கவிஞர்கள் உணர்ச்சிவசப் படுபவர்கள், ஆட்சி செய்பவர்களுக்கு நிதானமான சார்பற்ற அணுகுமுறை தேவை என்பது ப்ளூடோவின் தீர்மானம். ஒரு வகையில் இது சரி என்றுகூடச் சொல்லலாம்.

கவிதை, நாடகம், இசை போன்ற கலாபூர்வமான விஷயங்களில் அறிவின் கலப்பு கூடாது என்பது ரசிகர்களின் ஏகோபித்த கருத்து. அறிவு அல்லாது மற்ற புலன்கள் மூலம் பெரும் உணர்வுகளை அழகுப்புலத்தில் பொருத்திப் பார்க்க வேண்டும். அங்கே அறிவின் பகுப்பும் தொகுப்பும் நுழைந்தால் காரியம் கெட்டுவிடும் என்பது ஒரு கலைக் கொள்கை.

பாரதியார் இதில் எந்த வகை? பாரதநாடு விடுதலை பெற வேண்டும். உலக அரங்கில் சிறப்பொடு விளங்க வேண்டும் என்பதோடு பாரதியார் முற்றுப்புள்ளி வைத்திருந்தால் அவர் அழகுப் புலத்தில் மட்டுமே செயல் பட்டார் என்று சொல்லிவிடலாம்.

அவர் இமயமலையை வணங்கினார். கங்கையைப் போற்றினார். அவருடைய நாட்டுப் பற்றுக்கு அடிப்படையாக இவை இருந்தன. ஆனால் மற்ற கவிஞர்களிடமிருந்து பாரதி வேறுபட்டுத் தெரிகிறார். அவரிடத்தில் அறிவுப்புலனும் அழகுப்புலமும் இணைந்திருந்தன.

அழகுணர்ச்சி கொண்டவர், அழகுணர்ச்சி மட்டுமே கொண்டவர் என்றால் பாரதியின் கவிதை இந்திய விடுதலையை கடந்து சென்றிருக்காது.

கவிதையின் பெருமையைச் சொல்லவந்த பாரதி,

‘ஊணர் தேசம் யவனர்தந் தேசம்

உதய ஞாயிற் றொளிபெறு நாடு;

சேண கன்றதோர் சிற்றடிச் சீனம்

செல்வப் பார சிகப்புழந் தேசம்

தோண லத்த துருக்கம் மிசிரம்’

என்று எல்லா நாடுகளிலும் கல்வி பெருக வேண்டும் என்பதாக அவருடைய விருப்பத்தைத் தெரிவிக்கிறார்.

அறிவுப்புலனைப் பயன்படுத்தாமால் இந்தப் பார்வை அவருக்கு ஏற்பட்டிருக்காது.

இடிபட்ட சுவர்போல கலிவிழுந்தான்,

கிருத யுகம் எழுக மாதோ!

என்று ரஷ்யப் புரட்சியை வரவேற்றவர் பாரதியார்!

‘பேரருட் கடவுள் திருவடி யாணை,

பிறப்பளித் தெமையெலாம் புரக்கும் தாரணி விளக்காம் என்னரு நாட்டின் தவப்பெய ரதன் மிசை யாணை பாரவெந் துயர்கள் தாய்த்திரு நாட்டின் பணிக்கெனப் பலவிதத் துழன்று வீரர், நம்நாடு வாழ்கென வீழ்ந்த விழுமியோர் திருப்பெயராணை!

என்று இத்தாலி நாட்டு வீரர் மாஜினியின் பிரதிக்கினையைப் பதிவு செய்கிறார் பாரதியார்.

மானத்தால் வீழ்ந்து விட்டாய்! மதிப்பிலாப் பகைவர் வேந்தன் வானத்தார் பெருமை கொண்ட வலிமைதான் உடைய னேனும் ஊனத்தால் உள்ள  மஞ்சி ஒதுங்கிட மனமொவ் வாமல் ஆனத்தைச் செய்வோ மென்றே அவன்வழி எதிர்த்து நின்றாய்!

என்று பெல்ஜியம் நாட்டை வாழ்த்துகிறார் பாரதி!

உலக விஷயங்களைப் பதிவு செய்து கொள்வதற்கு பாரதியாருக்கு அறிவுப்புலன் பயன்பட்டது. பிறகு தமிழின் வனப்பும் செழிப்பும் சேர்ந்து பாடல்களாகவும் வெளிப்பட்டன. அறிவுப்புனாலும் அழகுப்புனாலும் சேர்ந்து இழைந்த அபூர்வப் பிறவி பாரதியார்.

 

“பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்”

அவமானம் துடைப்பதே அர்த்தம்!

விடுதலை பெற்ற பாரதத்தில் அரசும் மக்களும் எதையெல்லாம் சாதிக்க வேண்டும் என்று ஒரு பட்டியல் போட்டு பாடியிருக்கிறான் பாராது.

“பாரத தேசமென்று பெயர் சொல்லுவார் – மிடிப் பயங் கொள்ளுவார் துயர்ப் பகை வெல்லுவார்!”

என்று தொடங்கும் இந்தப் பாடலின் முதல் சரணமாக அவர் கூறும் விஷயத்தைப்  பார்ப்போம்.

“வெள்ளிப் பனிமலையின் மீதுலவுவோம்; அடி

மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம்;

“பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்குவோம்; எங்கள் பாரத் தேசமென்று தோள் கொட்டுவோம்”

‘பள்ளிக்கூடங்கள்’ அனைத்தையும் கோயில்களாக மதிக்க வேண்டும் என்று சிலர் விளக்கம் சொல்கிறார்கள். இது தவறானது என்பதற்கு “பாரத தேசமென்று” எனத் தொடங்கும் இந்தப் பாடலிலேயே மற்றொரு சரணத்தில் “ஆலைகள் வைப்போம், கல்விச் சாலைகள் வைப்போம்” என்று கூறுகிறார். எனவே பள்ளி என்று அவர் குறிப்பிடுவது கல்விக் கூடங்களை அல்ல.

நமது கோயில்களாக இருந்து மசூதி, சர்ச் ஆக மாற்றப்பட்ட தளங்களை மீட்டெடுத்து மீண்டும் கோயில்களாக மாற்ற வேண்டும் என்று விரும்பினார். அதனால்தான் 1947-ல் துணைப்   பிரதமராக இருந்த சர்தார் வல்லபாய் பட்டேல், சோமநாதபுரம் ஆலயம் இருந்த இடத்தில், இருந்த மசூதியை அகற்றிவிட்டு மீண்டும் கோயிலைக் கட்டி கும்பாபிஷேகம் செய்தார்.

பாண்டிச்சேரியில், வேதபுரீஸ்வரர் ஆலயத்தை ‘டூப்ளே’ இடித்து சர்ச் ஆகக் கட்டினான். புதுவைக்கே முன்பு வேதபுரி என்று பெயர் இருந்தது.

அயோத்தி, காசி, மதுரா ஆகிய ஸ்தலங்களில் மீண்டும் ஆலயம் வர வேண்டும்.

பாரதி பாடலின் உண்மையான அர்த்தம் புரிந்ததா?

நன்றி : விஜய பாரதம்

Leave a Reply