பாஜக.,வின் தேசியத் தலைவர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக் கூட்டம் சென்னையை அடுத்த மறைமலைநகரில் டிசம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது.

கட்சிப் பணிக்காக அமித்ஷா வருவது இதுவே முதல் முறையாகும். மறைமலை நகரில் மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்ற உள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக பாஜக தீவிரமாக செய்துவருகின்றனர். பாஜகவின் தேசிய நிர்வாகிகளும், தமிழக தலைவர்களும் இந்தக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.

அதன்பின், டிசம்பர் 21-ம் தேதி தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெறும் மாநிலநிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் கட்சிப்பணிகள் தொடர்பாக அமித்ஷா ஆலோசனை நடத்துகிறார்.

Leave a Reply