மகாபாரதம், ராமாயணம் போன்ற புராணங் களிலிருந்து அரசியலை கற்றுக் கொள்ள வேண்டும் என்று பா.ஜ.க. தலைவர் அத்வானி அறிவுறுத்தியுள்ளார். நாடு சுதந்திரம் அடைவதற்கு முந்தைய காலத்தில் அவரது பாட்டி மகா பாரதத்தை படிக்கும்படி அறிவுறுத்தியதை நினைவு கூர்ந்தார்.

கற்பித்தல்,ஒற்றுமை, அரசியல், துணிச்சல், ஒழுக்கம் ஆகியவற்றைக் கற்றுத்தருவதில், மகாபாரதம் போன்று வேறு சிறந்தகாவியம் இல்லை என்பது எனது கருத்தாகும்.

மகாபாரதத்தை முழுவதும் படிக்காமல், பகுதி பகுதியாக படிக்குமாறு என்னிடம் எனது பாட்டி கூறுவார்.

நான் கிறிஸ்துவ மிஷனரி பள்ளியில் தான் படித்தேன். எனக்கு ஆங்கிலமும், தாய் மொழியான சிந்தியும்தான் அப்போது தெரியும். எனவே அந்த மொழிகளில்தான் மகாபாரதம், ராமாயணம், பகவத்கீதையை படித்தேன். சுதந்திரம் அடைந்த பிறகே அதை என்னால் இந்தியில் படிக்கமுடிந்தது.'

சிந்தி, ஆங்கில மொழிகளில் அந்த காவியங்களை படித்ததை விட, ஹிந்தி மொழியில் படித்தபோது தான், அதன் பெருமை எனக்கு தெரிந்தது என்றார்

Leave a Reply