நாட்டின் முக்கிய துறைமுகங்களுக்கு, பிரத்யேக ரயில் போக்கு வரத்து மேற்கொள்ளப்பட உள்ளது.

இதுகுறித்து, மத்திய சாலை, நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்கு வரத்து துறை அமைச்சர், நிதின் கட்காரி கூறியதாவது:ரயில்வே கார்ப்பரேஷன் என்ற நிறுவனம், 12 பெரிய துறை முகங்களுக்கு, ரயில் போக்குவரத்திற்கான இணைப்புவசதிகளை ஏற்படுத்தும். இந்நிறுவனத்தில், அந்தந்த துறைமுகங்கள் ஈட்டும் லாபத்தின் அடிப்படையில், பங்குமூலதனம் மேற்கொள்ளப்படும். துறைமுகங்களின் லாபம், 200 – 400 கோடி ரூபாயாக உள்ளது. துறை முகங்களின் சரக்கு கையாளும் திறனை உயர்த்த, ஏற்கனவே முடிவுசெய்யப்பட்டு உள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த துறைமுகங்கள் கையாளும் சரக்கில், 12 பெரிய துறை முகங்களின் பங்களிப்பு, 61 சதவீதமாக உள்ளது.

கப்பல்துறையை மேம்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். அதுபோல், நதி நீர் போக்குவரத்தும் முக்கியமானது. இதற்கான மசோதா மூலம், எந்தமாநிலம் வழியாகவும், நதி நீர் போக்குவரத்தை மேற்கொள்வதற்கான அதிகாரம் கிடைக்கும்.நதி நீர் போக்குவரத்து, மிகவும் சிக்கனமானது. 1 கி.மீ., துாரம் சரக்கு போக்கு வரத்து மேற்கொள்ள, ரயிலில் ஒரு ரூபாயும், சாலையில், 1.50 ரூபாயும் செலவாகும். ஆனால், நீர்வழி போக்குவரத்திற்கு, வெறும் 50 காசுகள்தான் ஆகும். இவ்வாறு, கட்காரி கூறினார்.

Tags:

Leave a Reply