கிறிஸ்துமஸ் தினத் தன்று பண்டிகை கொண்டாட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் , எந்ததிட்டமும் முன்னெடுக்கப்பட வில்லை என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி விளக்கம் அளித்துள்ளார் .

மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் செயல் படும் பள்ளிகள் உள்ளிட்ட நாட்டின் அனைத்து கல்விக் கூடங்களுக்கும் கிறிஸ்துமஸ் தினமான டிசம்பர் 25ம் தேதியன்று வழக்கம் போல் விடுமுறை வழங்கப்படும் என ஸ்மிரிதி இராணி கூறினார்.

மேலும் அந்த தினத்தில் நடத்தப்படும் குறிப்பிட்ட கட்டுரை போட்டிகள்கூட இணையம் மூலமாகத்தான் நடத்தப்படும் என்றும், அதில் மாணவர்கள் பங்கேற்பதுகூட கட்டாயமானதல்ல என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

பரபரப்பான தலைப்பு செய்திகளை வழங்கவேண்டும் என்பதற்காக, சில ஊடகங்களில் இது போன்ற தவறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

Tags:

Leave a Reply