அபிஷேக் பச்சன் கதாநாயகனாக நடிக்கும், 'ஆல் இஸ்வெல்' பாலிவுட் படத்தில் நடிப்பதிலிருந்து விலகினார், மத்திய அமைச்சர் ஸ்மிருதிஇரானி.

'டிவி' தொடர் நடிகையாக இருந்து, பின் அரசியல் வாதியாக மாறி, தற்போது, மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதிரானி. இவர் மத்திய அமைச்சராக பதவியேற்கும்முன், அபிஷேக் பச்சன் கதாநாயகனாகவும், அசின் கதாநாயகியாகவும் நடிக்கும், 'ஆல் இஸ்வெல்' என்ற பாலிவுட் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இவர் தொடர்பான சிலகாட்சிகளும், கடந்த, 2013 நவம்பரில் படமாக்கப்பட்டன. ஆனாலும், குறித்த காலத்திற்குள் படப்பிடிப்பு முடிவடைய வில்லை. இதன்பின், மே மாதம், மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சராக ஸ்மிருதி இரானி பதவியேற்றதை தொடர்ந்து , அவரால் தொடர்ந்து படத்தில் நடிக்க முடியவில்லை. அதனால், 'ஆல் இஸ்வெல்' படத்தில் நடிப்பதில் இருந்து விலகிவிட்டதாக, ஸ்மிருதி இரானி தெரிவித்துள்ளார்.

Leave a Reply