வாரிசு அரசியல் ஜன நாயகத்தை அரிக்கும் கரையான்கள், அவை ஜன நாயகத்தின் அஸ்திவாரத்தையே அரித்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை இறுதிக்கட்டத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத்தில் பிலாவர் தொகுதி, சான்கெய்ட் மாண்லி பகுதியில் பாஜக சார்பில் நேற்று பிரமாண்ட பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திரமோடி பேசியதாவது:

காஷ்மீர் மாநிலத்தில் தந்தை- மகன் (பரூக் அப்துல்லா- ஒமர் அப்துல்லா), தந்தை-மகள் (முப்தி முகமது- மெகபூபா முப்தி முகமது) ஆட்சிகள் மாறிமாறி வந்து கொண்டிருக்கின்றன. மாநில மக்களுக்கு ஆட்சி நிர்வாகத்தில் இது வரை வாய்ப்பு கிடைக்கவில்லை.

வாரிசு அரசியல் என்பது ஜனநாயகத்தை அரித்துதின்னும் கரையான்கள். அவை ஜனநாயகத்தின் அஸ்திவாரத்தையே அரித்து விடும். ஜம்மு-காஷ்மீரில் வாரிசு அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது. பாஜகவில் ஜனநாயகம் தழைத்தோங்கி வருகிறது. ஒரு டீக்கடைக் காரர் இப்போது நாட்டின் பிரதமர். இது தான் ஜனநாயகம்.

காங்கிரஸ் கட்சி மக்களை ஏமாற்றிவருகிறது. காஷ்மீரில் ஏதாவது ஒருகட்சிக்கு ஆதரவு அளித்து அதன் மூலம் அந்தகட்சி ஆதாயம் அடைந்துவருகிறது. இதனால் காஷ்மீர் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

மாநிலத்தில் வலுவான அரசு அமையவேண்டும். அப்போதுதான் வளர்ச்சி பணிகள் உத்வேகம் பெறும். பாஜக ஆட்சிக்கு வந்தால் சுற்றுலா மேம்படுத்தப்படும். வேலை வாய்ப்புகள் பெருக்கப்படும். எனவே இந்த முறை பாஜகவுக்கு வாக்களியுங்கள்.என்றார்.

Leave a Reply