பாஜக எம்பி.,க்களின் சமீபத்திய சில பேச்சுக்கள் பாராளுமன்றத்தையே பல நாள் முடக்கிவிட்டது எனவே வரம்பு மீறி பேசவேண்டாம் என பாஜ எம்பிக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாஜ எம்பிக்கள் கூட்டத்தில் மோடி பேசியதாவது: நாம் மேற்கொண்டு வரும் வளர்ச்சிப்பணிகள், கண்களால் காணக் கூடிய வகையில் களத்தில் நிறைவேற்றப்பட்டிருக்க வேண்டும். வெறும் காகிதத்தில் மட்டும் இருக்கக் கூடாது. வளர்ச்சிப்பணியில் இருந்து, இந்த அரசு தடம்புரண்டு விடக் கூடாது. வாஜ்பாயின் பிறந்த நாளான டிசம்பர் 25ம் தேதியை, நல்லாட்சி தினமாக கொண்டாடும்வகையில், கருத்தரங்கம், மாநாடுகளை அன்றை தினத்தில் நடத்தவேண்டும். கட்சிக்கும், அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில், வரம்பு மீறி சர்ச்சைக் குரிய பேச்சுக்களை பாஜ எம்பிக்கள் பேசக் கூடாது. இவ்வாறு மோடி கேட்டுக் கொண்டார்.

Leave a Reply