பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் நரேந்திரமோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் 'டுவிட்டர்' சமூக வலைத் தளத்தில் செய்தி விடுத்துள்ளார்.

அதில் அவர், "பெஷாவர் பள்ளிக் கூடத்தில் நடந்த கோழைத்தனமான தாக்குதல்களுக்கு கடும்கண்டனம் தெரிவிக்கிறேன். இது அர்த்தமற்றது. சொல்லொணா மிருகத் தனமானது. அப்பாவி மக்களை குறிப்பாக இளம் குழந்தைகளை பலிவாங்கிய கொடூர தாக்குதல்"

"இந்த தாக்குதலில் தங்களுக்கு அன்பானவர்களை இழந்த ஒவ்வொரு வரையும் நினைத்து என் இதயம் விம்முகிறது. அவர்களின் துக்கத்தை நாங்கள் அனைவரும் பகிர்ந்துகொள்கிறோம். எங்கள் ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கிறோம்" என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply