வேலூர் கே.வீ. குப்பம் அருகே பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வேலூர் மாவட்டம் கே.வீ. குப்பம் அருகே காங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த பள்ளிச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. பள்ளிக்குச் சென்ற பெண் குழந்தைக்கு இவ்வாறு நேர்ந்திருப்பதை அந்தத் தாய் எப்படி தாங்கிக் கொள்வாள் என்பதை நினைக்கும் போது தாங்க முடியாத அதிர்ச்சி ஏற்படுகிறது.

மதுதான் இந்தக் கொடூரத்துக்கு காரணம் எனத் தெரிகிறது. எனவே, டாஸ்மாக் மதுக்கடைகளை தமிழக அரசு மூட வேண்டும். மதுவின் மூலம் வருவாய் ஈட்டும் அரசு, மக்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்.பாலியல் குற்றங்களைத் தடுக்க கடுமையானச் சட்டங்கள் இருந்தும் இதுபோன்றச் சம்பவங்கள் தொடர்வது காவல்துறையின் செயலற்றத்தன்மையைக் காட்டுகிறது. இதுபோன்ற சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழிசை வலியுறுத்தியுள்ளார்.

Tags:


Leave a Reply